திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

நூல் அறிமுகம்

குழந்தைகள் மனதில் அறிவியலுக்கான விதைகளைத் தூவ முயலும் தங்கமீன் குஞ்சுகள்..!

Thankameen-Kunchuhal-Faiza-Aliஇன்றைய இருபத்தோராம் நூற்றாண்டை அறிவியலே ஆட்டிப் படைக்கிறது. ஆட்சி செய்கிறது. இந்த நவீன உலகின் மேலைநாட்டுச் சிறுவர்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது, எமது குழந்தைகள் எத்தனை தூரம் பின்தள்ளப் பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் அறிவியலுக்கான அடித்தளம் அவர்களது இளமனதில் விதைக்கப் படாததே காரணம் என்பதாலோ என்னவோ திருமதி எஸ்.பாயிஸா அலி  தங்கமீன் குஞ்சுகள் மூலம் குழந்தைகள் மனதில் அறிவியலுக்கான விதைகளைத் தூவும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

 

முத்துச் சிரிப்பில் முளை விடும் சிறுவர் பாடல்கள்


PT-azeezகிண்ணியா பிரதேசத்தில் பி.ரி. அஸீஸின் “உணர்வூட்டும் கவிதைகள்” கவிதைத் தொகுதியினைத் தொடர்ந்து மற்றுமொரு வெளியீடாக வந்திருப்பதுதான் “சிறுவர் பாடல்கள்” எனும் நூல்.

 

"சாகரம்" சாகித்திய விழா சிறப்பு மலர்

 kin1கிண்ணியா பிரதேச செயலகத்தினால் பிரதேச சாகித்திய விழாவினையொட்டி சாகித்திய விழா சிறப்பு மலர் "சாகரம்" வெளியிடப்பட்டிருக்கின்றது.

கிண்ணியாவின் கலை-கலாசார-பாரம்பரியங்கள் தொடர்பான விபரங்கள் அடுத்த சந்ததியினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதான நோக்கத்தை மையாமாகக் கொண்டு கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பல அரிய தகவல்கள், புகைப்படங்கள் என்பவற்றை உள்ளடக்கி 53 தலைப்புகளில் காத்திரமான முறையில் இம்மலர் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

 

நெடுங்கவிதைகளாய் உருமாறி வாழ்வியலைப் பாடும் சிறுகதைகள்..

‘‘லௌகீகம் வியாபித்த வாழ்வியற்தளம் தனி  பொதுவாழ்வின் தரிசனங்களாய் விரிகின்றபோது நான் தரிசித்த,என்னைத் தட்டிவிட்ட நிகழ்வுகள் என் ஜீவனிலேறி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன’’ எனக் கூறும் கவிஞர் கிண்ணியா ஏ எம்.எம் அலியின் இரண்டாவது நூல்தான் ஒரு தென்னைமரம் சிறுகதைத் தொகுப்பு.

1974 இல் இலக்கிய உலகில் தடம் பதித்த கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களின் ஆக்கங்கள் தாங்கி வராத தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தேசிய சர்வதேச ரீதியில் நடாத்தப் பட்ட ஏராளமான இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும்  விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் குவித்ததோடு அண்மையில் இலக்கியத்திற்கான  கலாபூஷணம் அரச கௌரவத்தையும்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பக்கம் 7 - மொத்தம் 7 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21669
மொத்த பார்வைகள்...2078593

Currently are 446 guests online


Kinniya.NET