திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

பெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்

Raahila-Majnoon

அரங்கேறும் கவிதைகள் எனும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளியான சகோதரி றாஹிலா மஜிட்நூன் 40 வருடங்களாக எழுதிவரும் ஒரு முத்த பெண் எழுத்தாளர்.

கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கும் இவர், கிண்ணியாவில் 1949ல் பிறந்து வளர்ந்து தற்போது முள்ளிப்பொத்தானையில் வசிப்பவர். க பொ த சாதாரண தரத்தில் ஒரே தடவையில் சித்தியெய்தியதன் மூலம் கிண்ணியாவில் க.பொ.த சாதாரண தரம் சித்தியெய்திய முதல் கிண்ணியா பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 7 பிள்ளைகளின் தாயான இவர் புஸ்ரா பாலர் பாடசாலை எனும் முன்பள்ளியையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. இச்சகோதரியின் இலக்கிய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

நேர்காணல்: கிண்ணியா எஸ் பாயஸா அலி

உங்களைப் பற்றி சில வரிகள்….

றாஹிலா : நான் திருகோணமலை கிண்ணியா பெரியாற்றுமுனையில் பிறந்து தற்போது முள்ளிப்பொத்தானையில் வசித்து வருகின்றேன். தந்தை முஹையதின் ஷாகுல் ஹமித். தாயார் ஐனுன் விவி . இருவருமே மௌத்தாகிவிட்டனர்.

கணவர் எம் எஸ் மஜிட்னூன் உதவிப் பொலிஸ் பரிசோதகராக கடமை புரிகின்றார். எங்களுக்கு 7 பிள்ளைகள் . (4 ஆண்பிள்ளைகள் 3 பெண்பிள்ளைகள்) நான்கு பிள்ளைகள் ஆசிரியசேவையிலும் ஒரு மகன் பொலிஸ் இலாக்காவிலும் பணியாற்றுகின்றனர். இறைவன் எனக்குத் தந்த மிகப் பெரிய செல்வம் என் கணவர் என் மிதும் குடும்பத்தின் மிதும் மிகுந்த அக்கறையோடு இருப்பவர்.


உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இலக்கியத்துறையில் ஈடுபாடு இருந்ததா?

றாஹிலா : நிச்சயமாக எனது சிறிய தந்தையாகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தகவல் ஒளிபரப்பு பிரதி அமைச்சருமான ஜனாப் ஏ.எல் அப்துல் மஜித் அவர்களின் மேடைப் பேச்சும் முற்போக்குக் கொள்கையும் எனது பிஞ்சு மனதை ஈர்த்தது.. அதிரடியான அவரது இலக்கிய வெளியிடுகளும் கட்டுரைகளும் எனக்குள்ளும் எழுதவேண்டும் என்ற ஆசையை வளர்த்துவிட்டன. அப்பொழுதெல்லாம் அவரைப் போன்று நானும் வர வேண்டும் என திடசங்கற்பம் கொள்வேன்.

உங்கள் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு பற்றி சொல்ல முடியுமா?

றாஹிலா : இலங்கை வானொலியை குறிப்பிட்டுசொல்லலாம் . சிறுவர் மலரில் தொடங்கி மாதர் மஞ்சரி கவிதை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஏராளமான ஆக்கங்கள் எழுதியுள்ளேன் எனது முதற் கவிதையை இல்லறப்பெண்ணே ! என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் . இதனை சகோதரி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வாசித்தார். அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .இக்கவிதையை பாராட்டி இந்தியாவில் சென்னையை சேர்ந்த ஏ.முருகப்பன் என்ற நேயர் கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான எனது கவிதைகள் கட்டுரைகள் இந் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியுள்ளன . இலங்கை வானொலியை எனது ஆசானாகவே கருதுகின்றேன்.

பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் உள்ளதா?

றாஹிலா : 1967ல் விரகேசரி பத்திரிகையின் முஸ்லிம் சுடரில் இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் என்ற எனது கட்டுரை முதலில் பிரசுரிக்கப்பட்;டது. மேலும் தினபதி கவிதாமண்டபம் பகுதியில் 4வது அங்கத்தவராக இருந்தேன். புத்திரிகையில் எனது புகைப்படமும் குறிப்புப்படமும் வெளியாகியது. துடிப்பும் ஆர்வமும் உள்ள கவிதைகளை எழுதுவதாக தினபதி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார் . கிண்ணியாச் செல்வி என்ற புனைப்பெயரிலேயே எழுதிவந்தேன் . தினகரன் தினமுரசு என்பவற்றிலும் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன. அன்று தொடங்கி இன்று வரை சுமார் 40 வருடங்களாக எழுதிவருகின்றேன்.; எனது ஊடகங்களில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன . அது மாத்திரமன்றி ருபவாஹினியில் எனது நேர்காணல் இடம்பெற்றது. எத்தனையோ அறிஞர்கள் திறமைசாலிகள் அமர்ந்து தமது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்ட அந்த ஆசனத்தில் என்னை கௌரவமாக நேர்கண்ட ருபவாஹினி ஊழியர்களுக்கு என்றும் நான் நன்றி உடையவளாக இருக்கின்றேன்.

எழுத்துத்துறையில் நிண்ட காலம் அனுபவம் பெற்றவர் என்ற வகையில் மறக்க முடியாத சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்திருக்குமே…?


றாஹிலா : ஏராளமான விடயங்கள் உள்ளன . சோகமான சுகமான பல சம்பவங்கள் உண்டு. எல்லாவற்றையும் விளக்க முடியாதல்லவா? . எனது பள்ளிப்பருவத்திலே நான் நன்றாக பாடுவேன். நான் பாடுவதை கேட்கும் எனது தந்தை நிங்கள் வேறு யாரோ எழுதிய பாடலை அல்லவா பாடுகிரிங்க நிங்களே எழுதிப் பாடுங்க பார்ப்போம் அப்ப தான் நிங்கள் உண்மையிலேயே கெட்டிக்காரி என்பார்.

எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை என்பதால் தொடர்ந்தும் எனக்கு ஊக்கம் அளித்தனர். அதன் பின்னரே நானும் பாடல் எழுதிப் பார்த்தால்என்ன? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.

ஜல்…ஜல்…ஜல் எனும் சலங்கை ஒலி என்ற சினிமா பாடலுக்கு ஓது…ஓது…ஓது உயர் திருகுர்ஆன் என்று ஆரம்பிக்கும் இஸ்லாமிய பாடலை இயற்றினேன். இந்த பாடலில் மறக்கமுடியாத சந்தோஷம் நிறைய உண்டு. காரணம் அவ் வேளை நான் தரம் 9ல் கற்றுக்கொண்டிருந்தேன். அப்போது நடைபெற்ற மிலாதுன் நபி விழாவில் இஸ்லாமிய பாடல் போட்டியில் இந்தப் பாடல் தான் முதலிடம் பெற்றது .

அந்நிகழ்ச்சிப்பிரிவில் என்னோடு போட்டிக்கு வந்த பாடல்களில் எனது தமிழ் ஆசிரியருடையதும் மற்றும் எமது ஊரின் பிரபல கவிஞர்களுடைய பாடல்களும் பாடப்பட்டன . அந்தப் பெரியவர்கள் அனைவருமே அன்று என்னை பாராட்டிய அந்தச் சம்பவம் எனக்கு மறக்கமுடியாத நிகழ்வு என்றால் மிகையில்லை.

உங்கள் ஆக்கங்களை புத்தகமாக வெளியிடும் நோக்கம் உண்டா?

றாஹிலா : ஆம் ஏற்கனவே ஒரு கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது . அரங்கேறும் கவிதைகள் எனும் முதற் பிரசவமான இக்கவிதை நூலை 2005.03.15 ல் கிண்ணியா மத்திய கல்லூரியில் வெளியிட்டேன் . 82 கவிதைகளுடன் 140 பக்கங்களில் மருதூர் ஏ. மஜித், நஜிப் அப்துல் மஜித், தேவகடாட்சம் கனகசபை ஆகியோரின் உரைகளும் எனது நூலுக்கு கனதி சேர்த்தன எனலாம்.

எனது வெளியிட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டது உண்மைதான் என்றாலும் நான் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதே மிக வருத்தமான விடயம். மேலும் இந்த வருடத்திற்குள் கட்டுரைத் தொகுப்பு சிந்தனைத்துளிகள் சிறுகதைத்தொகுதி ஒன்று அமைச்சர நஜிப் ஏ மஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகிய நான்கு நூல்களை வெளியிட எண்ணியுள்ளேன்.

நான் இஸ்லாமிய நூல்கள் வாசிப்பேன. அப்துல் ரஹிம் போன்றவர்களின் நூல்களிலும் இமாம் கஸ்ஸாலி (ரஹ); அவர்களதும் இன்னும் பல அறிஞர்களதும் நூல்களை வாசிப்பதுண்டு . குறிப்பிட்டு சொல்லுவதை விட யாருடைய எழுத்துக்கள் சிந்தனையை தூண்டி அறிவை பெற உதவுகிறதோ அவர்களை எனக்குப் பிடிக்கும்.

உங்களின் வெளியிடுகள் தொடர்பாக ஏனையவர்களின் கருத்துகள் எவ்வாறு உள்ளது ?

றாஹிலா : எனது அரங்கேறும் கவிதைகள் எனும் நூல் மாத்திரம்தானே அரங்கேறியுள்ளது . அது தொடர்பான விமர்சனம் ஞானம் சஞ்சிகையின் ஏப்ரல் இதழிலும் மற்றும் தினகரனிலும் வெளியானது . மேலும் ருபவாஹினி உதய தரிசனம் நிகழ்ச்சியில் இளையதம்பி தயானந்தா அவர்களும் விமர்சித்திருந்தார். அத்தோடு 2007-01-14 எங்கள் தேசம் பத்திரிகையிலும் இது தொடர்பான சிறு குறிப்பு வெளியிடபட்டிருந்ததை இவ் வேளையில் நன்றியோடு நினைவுபடுத்துகிறேன் .

பெண்களின் எழுத்துத்துறை தொடர்பாக …?

றாஹிலா: கல்வி என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் அவசியமானது . எழுத தகுமான விடயங்களை எழுதி வெளியிடுவதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பொருத்தமட்டில் மிக ஜாக்கிரதையாகவும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகாதவாறுமே எழுத வேண்டும் குறித்த ஒரு துறையில் மட்டும் தான் எழுதமுடியும் என்று இருந்துவிடாது பல்வேறு துறைகளிலும் அவர்கள் எழுதவேண்டும் .

ஆனாலும் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும். எமது முஸ்லிம் பெண்களை பொருத்தமட்டில் தங்கள் இளமைப் பருவத்தில் வேகமாக எழுதுகிறார்கள். திருமணம் குடும்ப வாழ்கை என்று வரும் போது நாளடைவில் இத்துறையை விட்டும் காணாமல் போய்விடுகிறார்கள் . ஒரு சில சகோதரிகள் மாத்திரமே தொடர்ச்சியாக பேனா பிடிக்கிறார்கள் . இறைவன் உதவியோடு நான் 40 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன் .

குடும்பச்சுமையோ வயதோ எனது எழுத்துத்துறைக்கு தடையாக இருந்ததில்லை . எனவே பெண்களின் இலக்கியப்பணி விரிவுபடுத்தப்படவேண்டும் . ஏனைய எமது சகோதரிகளும் தொடர்ச்சியாக எழுதிவரவேண்டும் என்பதே . எனது அன்பான வேண்டுகோள் இந்த வகையில் எனது கணவர் பிள்ளைகள் மருமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

சாதித்து விட்டோம் என்ற திருப்தி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

றாஹிலா: நிச்சயமாக இல்லை. எத்தனையோ அறிஞர்கள் பெரியோர்கள் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற இந்தப் பூமியில் எனது எழுத்து தூசுக்கு சமன். ஆனால் எழுதிவழங்கான் வாழ்கை கழுதை புறண்ட களம் என்பதற்கேற்ப எனது எழுத்துகளை பேனாவில் புரள விடுவது தான் எனக்குப் பிரியம் . இறைவன் எழுதுகோலை கொண்டுதான் எழுத கற்றுக்கொடுத்தான். முதன் முதலில் இறைவனால் படைக்கப்பட்ட அந்தப் பேனாவை நான் எனது உயிருக்குச்சமனாக கருதுகிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விட்டில் எனது எழுத்துக்கள் எங்கும் எதிலும் பரந்து கிடப்பது தவிர்க்கமுடியாதது.

தோழிகளுக்கு எழுத்துத்துறை பற்றி எதனை கூற விரும்புகிறிர்கள் ?

றாஹிலா: வாசிப்போடு நிறுத்திக்கொள்ளாது நிங்களும் எழுதுங்கள் . தொடர்ந்து சோர்வில்லாது எழுதிக் கொண்டே இருங்கள் என்பது தான் என் கருத்து . மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் . அவன் எனக்களித்த வரம் தான் எனது எழுத்தும் குடும்பம் உறவுகள் எல்லாமுமே
2010ம் ஆண்டிற்கான கலாபூஷண விருது உங்களுக்கு கிடைத்ததையிட்டு உங்கள் அபிப்பிராயம் என்ன?
வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கின்ற இந்த விருது திருகோணமலை மாவட்ட முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரும் கவிஞரும் என்ற வகையில் எனக்குத்தான் முதலில்; கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது (அல்ஹம்துலில்லாஹ்)

தொடர்ந்தும் எழுதுவதுண்டா? தொடர்ந்தும் எழுதுவதற்கு சிரமமில்லையா?

சந்தர்ப்பம் கிடைக்கும் போது எழுதுவதுண்டு. எழுதுவது எனக்கு சிரமமில்லை. இல்லத்தில் வேலை அதிகமாக இருக்குமே! மிக மிக அதிகம் தான். ஏனெனில் எனது மூன்று மகள் மார்களும் ஆசிரியத்தொழில் செய்வதால் அவர்களது பிள்ளைகளை பராமரிப்பது எனது பொறுப்பாக இருக்கின்றது.

பேரக்குழந்தைகளை கவனிப்பது சிரமமாக இல்லையா?

 

றாஹிலா:பேரக்குழந்தைகள் இறைவனின் அமானிதங்கள். அவர்களை நானும் அமானிதங்களாகவே கருதுகிறேன். சுபஹானகல்லாஹ்; வபிஹம்திக அஷ்ஹது அல்லாயிலாக இல்லாஅன்த வஸ்தஹ்பிருக வஆதுபிலைக 

 

Mrs. Rahila Majeednoon,  280/R, 95ம் கட்டை, முள்ளிப்பொத்தானை


 

 

Share
comments

Comments   

 
0 #1 Custom Essay 2018-04-25 04:42
college essay help essay 911 good essays for college personal essay for college: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #2 Homework Now.Com 2018-04-25 23:32
college essay writing college essays college essays college essay: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #3 Write Essays 2018-04-26 17:36
college essays college essay college essays college essays: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #4 Term Paper Writers 2018-04-27 11:41
college essay help college essay help college essays college essay writing: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #5 Write An Essay 2018-04-28 06:40
college essays college essay personal essay for college college essay help: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #6 Buy Essay Papers 2018-04-29 02:07
college persuasive essay college persuasive essay college essay help college application essay: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #7 Online Essay Writers 2018-04-29 20:45
college persuasive essay descriptive writing essays school essay starting a college essay: http://collegeessays.cars
Quote | Report to administrator
 
 
0 #8 Payday Loan Online 2018-10-13 17:08
bad credit loans guaranteed approval credit loans guaranteed approval no credit loans credit loans guaranteed approval: https://creditloansguaranteedapproval.com
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19897
மொத்த பார்வைகள்...2218082

Currently are 348 guests online


Kinniya.NET