வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

மக்கள் மனங்­களில் ­வாழும் பேரா­சி­ரியர் மர்ஹும் கே.எம்.எச். காலிதீன். - கிண்ணியாவின் பெருமை!!

Prof Kalideenதிரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள, கிண்­ணியா, ஈச்­சந்­தீவு கிரா­மத்தில் 1944ஆம் ஆண்டு பிறந்த மர்ஹும் காலிதீன் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்து வரு­டங்கள் சென்றாலும் அவ­ரது நினை­வுகள் இன்னும் பசுமை­யா­கவே உள்­ளன.

கிண்­ணியா மகா வித்­தி­யா­லயம், கொழும்பு ஸாஹிரா கல்­லூரி என்­ப­வற்றில் கல்வி பெற்ற அவர் 1966ஆம் ஆண்டு கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டார். பட்டக் கல்­வியை அங்கு நிறைவு செய்த அவர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­புத்­து­றையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

1972ஆம் ஆண்டு ஆசி­ரி­ய­ராக நிய­மனம் பெற்ற அன்னார் கொழும்பு மற்றும் கம்­பளை ஸாஹிராக் கல்­லூரிகளில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அரபு, இஸ்­லா­மிய நாக­ரீ­கத்­துறை விரி­வு­ரை­யா­ள­ராகப் பணி­யாற்­றினார்.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அரபு இஸ்­லா­மிய நாக­ரீ­கத்­துறை தலை­வ­ராகப் பணி­யாற்­றிய அவர் அத்­து­றையின் வளர்ச்­சிக்­காக அய­ராது பாடு­பட்டார். யாழ். பல்­க­லைக்­க­ழகம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது பேரா­சி­ரி­யர்கள் கைலா­ச­பதி, இந்­தி­ர­பால, சிவத்­தம்பி, வித்­தி­யா­னந்தன் ஆகி­யோரின் நல்­லன்­பையும் நம்­பிக்­கை­யையும் பெற்­ற­வ­ராக விளங்­கினார். தமிழ்ச் சகோ­த­ரர்­க­ளுடன் நெருக்­க­மான தொடர்பு கொண்­டி­ருந்தார்.

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து சுமார் 600 தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் கல்­வியைத் தொடர முடி­யாது தவித்துக் கொண்­டி­ருந்­த­வே­ளையில், பேரா­சி­ரியர் காலிதீன் இன வேறு­பாடு காட்­டாது அம்­மா­ண­வர்­க­ளுக்கு உத­வினார். இடம்­பெ­யர்ந்த மாண­வர்­களின் நலன்­க­ருதி பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் இணைப்­ப­தி­கா­ரி­யா­கவும் அவர் அரும்­பணி செய்தார்.

துருக்கி அங்­காரா பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது கலா­நி­திப்­பட்ட ஆய்­வினை மேற்­கொண்ட அவர் சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பல்­வேறு ஆய்வுக் கட்­டு­ரை­களை சமர்ப்­பித்­துள்­ள­துடன் வருகை தரு விரி­வு­ரை­யா­ள­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ளார்.

இஸ்­லா­மிய சமய வர­லாற்று அறிவில் தேர்ச்­சியும் அரபு மொழி பரிச்­ச­யமும் பார­சீக, துருக்கி மொழி­களில் தொடர்பும் கொண்ட அவர் இஸ்­லா­மியக் கருத்­து­க­ளிலும் கொள்­கை­க­ளிலும் விட்­டுக்­கொ­டுக்­காத மாற்­றத்தை அனு­ம­திக்­காத போக்­குள்­ள­வ­ராக விளங்­கினார்.

இலங்கை தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தை தோற்­று­விப்­பதில் மறைந்த அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்­ரப்­புடன் பாடு­பட்ட அவர், இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தின் முத­லா­வது கலை, கலா­சாரப் பீடா­தி­ப­தி­யா­கவும் நிய­மனம் பெற்று பணி செய்தார். முத­லா­வது உப­வேந்தர் கலா­நிதி எம்.எல்.ஏ.காத­ருடன் இணைந்து பல்­க­லைக்­கழக வளர்ச்­சிக்­காக பாடு­பட்­டதை நன்­றி­யுடன் நினைவு­கூ­ர­வேண்டும்.

தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் புதிய நூற்­றாண்டின் சலால்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்கும் பட்­ட­தா­ரி­களை உரு­வாக்க வேண்­டு­மென்­ப­திலும் மர்ஹும் அஷ்­ரப்பின் கனவு நன­வாக வேண்­டு­மென்­ப­திலும் அவர் உறு­தி­யாக இருந்தார். பல்­க­லைக்­க­ழக ஆசி­ரியர் சங்­கத்தின் தலை­வ­ரா­கவும் அவர் பணி செய்தார். அவ­ருக்கு தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் இணைப் பேரா­சி­ரியர் பட்டம் வழங்கி கெள­ர­வித்­தது. இதன் மூலம் அவ­ரது கீர்த்தி மேலும் உயர்ந்­தது.

முஸ்­லிம்­களின் கல்வி முன்­னேற முன்­னோ­டி­யாக விளங்­கிய மர்ஹும் கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத், மறைந்த அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகி­யோரை அவர் அதிகம் நேசித்தார். இலங்கை இஸ்­லா­மிய ஆய்வு நிலையம், இலங்கை கதீப்­மார்கள் சம்­மே­ளனம் என்­ப­ன­வற்றில் சமூகத் தொண்­டாற்­றிய அவர் ஈரா­னிய சிந்­த­னை­க­ளிலும் பற்றுக் கொண்­டி­ருந்தார்.

கொழும்பு பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மஜ்­லிஸின் ஸ்தாப­க­ரா­கவும் பேரா­தனை பள்­ளி­வாசல் ஏற்­பாட்­டா­ளர்­களின் ஒரு­வ­ரா­கவும் அகில இலங்கை மெள­லவி ஆசி­ரியப் பேர­வையின் மத்­திய கவுன்சில் தலை­வ­ரா­கவும் அகில இலங்கை இளம் பட்­ட­தா­ரிகள் சங்க ஸ்தாப­க­ரா­கவும் அவர் மிளிர்ந்தார்.

எளிமை அறிவு குடி­கொண்ட தோற்றம், சிந்­தனை கூடிய சாந்த முகம், மென்மை, இனிமை, நகைச்­சுவை நிறைந்த பேச்சு, அமை­தி­யான ந,ைட மனி­த­னென்றால் இப்­ப­டித்தான் வாழ வேண்டும் என்ற உய­ரிய பண்­புகள் மொத்­தமே குடி­கொண்ட பேரா­சி­ரி­யரின் மறைவு நாட்­டிற்கும் சமூ­கத்­திற்கும் பேரி­ழப்­பாகும்.

அவ­ருடன் தொடர்பு கொண்டு பழ­கு­ப­வர்கள் எளிதில் மறந்து விட மாட்­டார்கள். அவ­ருடன் இணைந்­தி­ருக்கும் சந்­தர்ப்­பங்கள் இனி­மை­யா­னவை, பசு­மை­யா­னவை. சமூ­கத்­திற்கும் ஏனை­ய­வர்­க­ளுக்கும் உதவி செய்­வதையே தனது இலக்கும் இலட்­சி­ய­மு­மாகக் கொண்டு மிளிர்ந்தார்.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் அவர் சிறந்த உறவு கொண்­டி­ருந்தார். தனது அன்­றாட வேலைப்­ப­ளுக்­க­ளுக்கு மத்­தி­யிலும் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கத் தவறுவதில்லை. தன்னை நாடி வருபவர்களை அவர் ஒருபோதும் வெறுமனே திருப்பியனுப்பியதில்லை. இது அவருக்கே உரித்தான சிறந்த பண்பாகும்.

மரணித்த நண்பர்களுக்காக பிரார்த்தனையுடன் கூடிய இரங்கல் கூட்டங்களை நடாத்துவது அவரது மற்றுமொரு சிறந்த பண்பாகக் காணப்பட்டது. அவரது சமூகப் பணிகளுக்கு அவரது மனைவியும் பிள்ளைகளும் பக்கபலமாக விளங்கினர்.

வல்ல இறைவன் அன்னாரது சகல பாவங்களையும் மன்னித்து உயர்ந்த சுவர்க்கத்­தில் நுழையச் செய்ய வேண்டும்.

நன்றி: ஐ.எல்.எம். றிஸான்

Share
comments

Comments   

 
0 #1 Sarajideen 2017-04-18 23:04
It's a great pleasure to express a few words about Dr. Khalideen. He is one of the Islamic scholars. He has tirelessly been devoting and dedicating his life and time for long time to develop our Muslim community educationally. Being honest, he always extends his hands for those who need his help. May Almighty Allah grant him Jennethul Firthuous ( paradise)
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 218 guests online


Kinniya.NET