வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

35 வருட கல்விப் பணியிலிருந்து கிண்ணியா வலய பிரதிக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஏ.எம். அப்துல்லா ஓய்வு.!

Abdulla-Pri

 கிண்ணியா வலயக்கல்வி ஆலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய ஜனாப் ஏ.எம். அப்துல்லாஹ் பெப்ருவரி 06ந் திகதியுடன் தனது 35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கிண்ணியாவின் பெரியாற்று முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையிலும் பின் கிண்ணியா மத்திய கல்லூரியிலும் சில காலம் கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்றதுடன், தனது கலைப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் PGDE உம், தேசிய கல்வி நிறுவனத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமாவில் (Merit) சித்தியும் பெற்றவர். மேலும் இலங்கை கல்வி நிருவாக சேவை வகுப்பு 111 யையும் போட்டிப் பரீட்சை மூலம் பெற்றவர்.

கிண்.முனைச்சேனை வித்தியாலயத்தில் முதல் நியமனத்தினைப் பெற்ற இவர் மூதூர் மத்திய கல்லூரி கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியிலும், கிண்ணியா அறபா மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராக சேவையாற்றி புவியியல், சமூகக்கல்வி, வர்த்தகம் போன்ற பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தவர்.

1989 இல் நடந்த இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கிண்ணியா அல்-ஹிரா மகளிர் மகா வித்தியாலயம், கந்தளாய் அல்தாரிக் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 1ம் தர அதிபராகவும் சேவையாற்றினார்.

தொடர்ந்து மூதூர் கல்வி வலயத்தின் கிண்ணியாக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் 2009 கிண்ணியா கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்ட பின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

மேலும் பாடசாலைக் காலத்தில் விளையாட்டுத்துறையில் நன்கு ஈடுபாடு கொண்டவராகவும் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் இருந்தார்.

மர்ஹ"ம் அப்துல் முத்தலிப், மர்யம் வீவி ஆகியோரின் 09 பேர் கொண்ட (ஆண் மகன்கள் மட்டும்) பிள்ளைகளின் சிரேஸ்ட மகனுமாவார். சித்தி பௌசியாவின் கணவரும் விஹாஸா பேகம், மாலிஹா பானு, அஸீம் ஸப்ராஸ் ஆகியோரின் தந்தையுமாவார்.

கடந்த 35 வருட காலத்தில் கிண்ணியா பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் அவர் காட்டிய ஈடுபாடு பலராலும் போற்றப் படுவதோடு, தொடர்ந்து வெளியிலும் அவர் பணி தொடர வேண்டும் எனவும் வாழ்த்துகின்றோம்.

 

எம்.எச்.கலிலூர் றஹ்மான்
அதிபர்
வான்-எல முஸ்லிம் வித்தியாலயம்
கிண்ணியா.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 210 guests online


Kinniya.NET