வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

கிண்ணியா குழந்தைக்கவி எம்.ரி.சஜாத் "இரத்தினதீபம்" விருது வழங்கி கௌரவிப்பு!!

mt

கிண்ணியா குழந்தைக் கவி எம்.ரி.சஜாத் மரபுக் கவிதைகளினூடாக தனக்கான ஓர் இடத்தை பதிவு செய்து இலக்கிய உலகில் விசாலமுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றாh.இவர் அன்மையில் எழுதி வெளியீடு செய்த செல்லமே என்னும் சிறுவர் பாடல் தொகுயினூடக வெளியுலகுக்கும் தன்னை அடையாளப் படுத்தியதோடு இந்நூல் சிறந்த விருதுக்கான பரிசுகளை மூன்று இடங்களில் பெற்றமை குறிப்பிடத் தக்கது அவை கிழக்கு மாகாண சபை விருது. யாழ் இலக்கியப் பேரவை விருது, மற்றும் அரச சாகித்திய விருகள் என வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு இலக்கியத்தின் ஊடாக சாதனை செய்து கொண்டிருக்கும் கவிஞர் எம்.ரி.சஜாத்தை செல்லமே என்னும் சிறுவர் பாடல் தொகுதியின் சாதனையின் ஊடாக அன்மையில் இரத்தினதீபம் விருதுக்காகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கான விருது 24.03.2014. அன்று கண்டி கெப்பட்டிப்பொல ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்திய உதவித் தூதூவர் திரு.நடராஜன் அவர்களினால் வழங்கப்பட்டது.

படமும் தகவலும் கவிஞர் ஏ.கே.முஜாரத்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 212 guests online


Kinniya.NET