திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

மிருதுவாய் உதித்த எம் கொள்கை இஸ்லாமே...!

quran11

மனித குல தொடக்கம் தொட்டே  இஸ்லாமும் தோன்றி விட்டது என்பது தான் திருக்குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளிலிருந்தும் பெறப்படும் உண்மையாகும்,ஆரம்ப மனிதன் ஆதம் (அலை)  முதல் ஆகிர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் இஸ்லாம்தான் வெவவேறு வேதங்களிலும்,மொழிகளிலும் போதிக்கப்பட்டது எனலாம்,இன்றும் ஒரே தீன் இஸ்லாம்தான் என்பதில் வேற்றுக் கருத்தோ,மாற்றுக் கருத்தோ கிடையாது,அதனை இவ்வாறு ஆல் குர்ஆன்:

 

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோநிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான் (3:19)

 

கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்கு பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்த சொல் அரசுநிறுவனங்கள்குழுக்கள்தனிநபர்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இஸ்லாமிய கடமையாகும். தவ்ராத்சபூர்இஞ்சில் ஆகியவை முறையே மூசாதாவூத்ஈசாஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குரானில் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும் அதனாலேயே,இறுதியானதாகவும்,திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது-“…….அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்" (அடிபணிதல்) என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும்அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும்கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும்கடமையான ஸகாத்தை நிறைவேற்றி வருவதும்ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்றார்கள்.

 

சில பல்வழிபாட்டு வேதங்களைப் போல சாதிக்குள் சாதி அவற்றுள் தனித்தனி நீதி’ என சாதிச்சண்டைகளும்வர்ணாசிரம முறைகளால் கீழ்சாதி மேல்சாதி எனப்பிரித்துமனித உரிமைகள் பறிக்கப்பட்டு ஆடு மாடு மிருகங்களை விட மோசமான வர்களாக-தீண்டத்தகாத வர்களாக நடத்தப்படும் அவல நிலைகளையும் வேற்று மதங்களில் பார்க்கமுடிகிறது,ஆனால் இனிய இஸ்லாத்தில் அப்படியான வேறு பாடு இல்லை என்பது யாவரும் அறிந்ததே.

நால் பெரும் இமாம்களிடம்  கூட சிறு கருத்து வேறு பாடு இருந்தாலும் அவற்றை தூக்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்லவில்லை

 

ஹனபி மத்ஹப்:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை."[அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் (குர்ஆனுக்கும்) நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால்என் சொல்லை விட்டு விடுங்கள்! 

 

ஷாபி மத்ஹப்:

எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போதுஅல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது,அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால்ரஸூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.

 

மாலிக்கி மத்ஹப்

நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான்எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும்நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும்நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்."

 

ஹம்பலி மத்ஹப்

"என்னையோமாலிக்ஷாபீஈஅவ்ஸாயீஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன்ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்! 

மேற்கண்டவாறு இஸ்லாமிய மூத்த உலமாக்களின் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும்,இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன.,இம் மாபெரும் மேதைகள் நினைத்திருந்தால் அவர்களது மத்ஹப்கலைபரப்பி இருக்கலாம்,ஆனாலும் அவர்கள் பணிவுடன் வேண்டிய போக்கு மேலும் இஸ்லாம் வளர்வதட்கு ஒரு நரம்பு எனக் கூட சொல்லலாம்.

எனவே உம்மத் சமூகம்,இஸ்லாம் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான தேசியவாதம் களையப்பட்டு உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை ஊட்டப்படவேண்டும்! இஸ்லாம் பெரிதும் முழு உலகத்திலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் கொள்கை,கோட்பாடு  வளர்க்கவேண்டும் என்ற வாதம் முற்ரிலும்  நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு அடி மட்டமான கருத்தாகும்,2010-ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு,மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும்.

 சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்" அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது" என்று வினவினேன்,அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறிஅதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீத் கூட எந்த ஒரு கொள்கை சார்பாக கேட்கவில்லை மாறாக இஸ்லாம் என்ற சொல்லே உபயோகிக்கப்பட்டு இருக்கிறது இவ்விடத்தில் மாத்திரமல்ல இன்னும் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்லாம் என்றே கூறப்படுகிறது.நாம் மறுமையில் கேட்கப்படும் கேள்விக்கு இஸ்லாம்தான் என் மார்க்கம் என்றுதான் சொல்லப் போகிறோம்.

 

இஸ்லாத்தையும் அதன் தனித்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம்மில் ஊறி,ஊண்டி இருக்க வேண்டுமே தவிர எம் கொள்கையில் அங்கத்தவர் சேர்க்கவேண்டும், கொடி பறக்க வேண்டும் என்ற இலக்கு இருக்குமாயின் இன்னும் நாம் பின் தங்கிய,தள்ளிய சமூகமாகவே இருப்போம் ‘’இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்’’என்பது போல சந்தர்ப்பம் பார்த்த்திருக்கும் கயவர்களிடம் இருந்து நம் சமூகத்தை பாது காக்கவேண்டும்.

 

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாதுமேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

 

தனி மரம் நட்டிய நாம் இன்று பல மரங்களையும்,கிளைகளையும் நட்டியும்அங்கனம் இஸ்லாம் என்ற கொள்கையை வளர்க்க நெறியிட்ட நாம் பல கொள்கைகளையும்,பிரிவுகளையும் வளர்த்துக் கொண்டோம்,இனியும் போதும் இந்த வெறியாட்டம்…ஆயிரம்தான் சொன்னாலும் நான் அந்த வாதிதான் என்று வாதிடாமல் வாருங்கள் இஸ்லாம் என்ற ஒற்றைக் கொடியை ஒழுங்காய் நட்டி உலக முழுதும் கட்டி எழுப்புவோம்.

 

இஸ்லாம் ஒரு நாட்டுக்கோ அல்லது சமூகத்துக்கோ சொந்தம் கொண்டாட முடியாது அது எதிரிப்,பாரசீகம்,ஸ்பைன்சிந்து நதியினிலே,நைல் நதியினிலே,புனித பூமியிலே பறந்தோடி பாலுலகம் எங்கும் பல வரலாறுகளை படைத்திருக்கின்றன,இன்று இஸ்லாம் மேற்கிலும்,கிழக்கிலும் கொத்துக் கொத்‌தாய்,கிளை கிளையாய் என பரவிக் கொண்டிருக்கையில் நாமே இலைகளை உதிர்த்து சருகுகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும்..!

 

இச் சிறு தீவினில் இவ்வளவு இயக்கங்களும்,கோட்பாடுகளும்,வேறுபாடுகளும் இருப்பதை நினைத்து நம் சமூகம் கவைலைப் பட்டாலும்,அந்நிய சமூகம் நம்மைப் பார்த்து கை கொட்டி சிரிப்பதை பார்க்கும்போதுதான் வேதனையும்,சோதனையும்.

 

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்ககொள்ளப்பட்ட) மார்க்கமாகும் (3:19)

 

இஸ்லாம்தான் எமது கொள்கை,கோட்பாடு ஆக இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும்,நோக்கமும் நமக்குள் ஆளப் பதிந்து ஆலம் முழுதும் இஸ்லாமியம் வளரட்டும் என்ற துவாவுடன் ...! வளரட்டும் இஸ்லாம் ….!


Kinniya Zuhair Ali (Ghafoori-UoC)

 

 

Share
comments

Comments   

 
0 #1 Ahmed 2013-09-24 15:12
Good historical Article well done...
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19895
மொத்த பார்வைகள்...2218080

Currently are 547 guests online


Kinniya.NET