திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

குழந்தைகளுக்கு சாபமிடும் பெற்றோரின் கவனத்திற்கு!

imagesபெற்றோர் தம் குழந்தைகளுக்காக புரியும் பிரார்த்தனைகளை எந்த தடையும் இன்றி உடனே இறைவன் அங்கீகரித்து விடுகிறான் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு முடியுமான அளவு இறைவனிடம் இரு கரமேந்தி பிரார்த்திப்பதை தமது பொருப்பாக உணர்ந்து செயல்படும் பெற்றோர்கள் பலர் இருக்கும் அதேவேலை குழந்தைகளின் குரும்பு தனத்தை பொருக்க முடியாமல் உடனே அவர்களை சபித்து விடும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சிந்தித்துணர்ந்து செயல் படுவதற்காக பின்வரும் ஒரு நிகழ்வை இங்கு தருகிறேன்.

 

கஃபாவின் தலைமை இமாம் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதேஸ் பற்றி அறியாதோர் எவரும் இருக்க முடியாது என கருதுகிறேன். இறைவன் அவருக்கென வழங்கியுள்ள இனிமையான குரல் வளத்தினால் மக்கள் மனதை கவர்ந்தவர். அவர் பின் நின்று தொழுவதையே எதிர் பார்த்து மக்கா செல்லும் பலர் இருக்கின்றார்கள். இவர் தொழுவிக்கும் முறை வந்துவிட்டால் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றனர். அவர் அல் குர்ஆனை ஓத ஆரம்பித்து விட்டால் அதில் கட்டுண்டு தன்னிலை மறந்து கண்ணீர் சிந்தும் எத்தனையோ பேரை அங்கே காண முடியும்.

அவரை இந்த உயரிய நிலைக்கு இட்டுச் சென்றதுஇ அவரது குரும்பு தனத்தை பொருத்துக் கொள்ள முடியாமல் அவரது தாயார் கேட்ட துஆவும் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்த்தும் விதத்தில் அவரின் முக நூல் பக்கத்தில் இந்த நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்.

அவர் சிறு குழந்தையாக இருக்கும் போது ஒரு சந்தர்பத்தில் மண்ணில் விழையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்தவேலை அவரது தந்தை ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்துள்ளார். அதற்காக அவரது தாயார் உணவு தயார் படுத்திக் கொண்டிருந்தார். தனது தாயார் சற்று தலைமறைவான போது இவர் தனது இரு சிறு கரங்களினாலும் உணவில் மண்ணை அள்ளி வீசியுள்ளார். திரும்பி வந்து பார்த்த தாயார் அவர் மீது கடும் சினம் கொண்டு 'போ! இரு ஹரம்களின் இமாமாக இறைவன் உன்னை ஆக்கட்டுமாக!' என்று கூறியுள்ளார்.

தமது குழந்தைகளின் உயர்வுக்காக அயராது உழைக்கும் பல பெற்றோர் ஓரிரு வார்த்தைகளினால் அனைத்தையும் வீணாக்கிஇ தமது குழந்தைகளின் இழி நிலைக்கு நாம்தான் காரணம் என்பதை உணராது இருப்பதே வேதனைக் குரியதாகும்.

நாம் நமது குழந்தைகளுக்காக இறைவனிடம் இரு கரமேந்தி பிறார்த்திப்போமாகஇ எல்லாம் வல்ல அல்லாஹ் எமது குழந்தைகளின் எதிர் காலத்தை ஒளிமயமானதாக ஆக்கியருள்வானாக...

 (A.J.M மக்தூம்)

Share
comments

Comments   

 
0 #1 GuestKning 2018-03-10 19:51
guest test post
bbcode: http://temresults2018.com/
html
http://temresults2018.com/ simple
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19882
மொத்த பார்வைகள்...2218067

Currently are 327 guests online


Kinniya.NET