திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

இறை மதமும் இழிவாகும் தேசமும் ...!!

ea

சுகைர் அலி: சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டவே உருவாக்கப்பட்டதாகும்.

இறையியல் (Theology) என்னும் சொல் இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில்சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு எனவும் அதை விளக்கலாம்.இஸ்லாமிய மரபில் கலாம்(كلام) என்னும் சொல் இறையியலையும் மெய்யியலையும் குறிக்கிறது. திருக்குரான் பற்றிய ஆய்வும், இஸ்லாமிய சட்ட முறை பற்றிய் ஆய்வும் அதில் உள்ளடங்கும்

இஸ்லாமிய மெய்யியல் என்பது இஸ்லாமிய சமய, சமூக, பண்பாட்டுடன் தொடர்புடைய மெய்யியல் ஆகும். பொதுவாக இது இஸ்லாமிய சூழலில், இஸ்லாமியர்களால் ஆக்கப்பட்டது. இஸ்லாமிய மெய்யியல் பாரசீகம், அரபு, உருது,இந்தோனேசியன், துருக்கி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் ஆக்கப்பட்டு பகிரப்படுகிறது. இஸ்லாமிய மெய்யியலில் இறை, சட்டம், சமய நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்குமான உறவு ஆகியவை பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை.

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச்சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.

பிற சமயத்தில் கூறியுள்ளது போல, மனிதன் பாவியாகவே (Original Sin - ஆதிபாவம்) பிறக்கிறான்; முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் செய்த பாவம் மனித குலம் முழுமையின் மீதும் படிகிறது என்ற கருத்தை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு மதம் இறைவனுக்கு வழிபாட்டுத் தலங்களில் அடிபணிந்தால் போதும்; வேறு துறைகளில் உன் விருப்பப் படி நடந்து கொள்ளலாம் என்று கூறுகிறது, மற்றொரு மதம் அரசியல், சமூகம், பொருளியல் உட்பட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இறைக்கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படியவேண்டுமென்று கூறுகிறது.,ஒரு மதம் பசுவை தெய்வமாக வழிபடச் சொல்கிறது,மற்றொரு மதம் அதுவும் மற்ற பிராணிகளைப் போன்றதே. உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் அதனைப் பயன்படுத்தலாம் என்கிறது,ஒரு மதத்தில் பாவம் எண்னத் தடைசெய்யப்பட்ட செயல்களை இன்னொரு மதம் தடைசெய்யவில்லை.

இவ்வாறு சமயங்களுக்கிடையிலுள்ள வேறுபாடுகள் விரிந்து கொண்டே போகும். எனவே அடிப்படைக் கோட்பாடுகளிலேயே வேறுபாடு உள்ளது.

எல்லா மனிதர்களின் உள்ளங்களும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் ஒரு கொள்கையே சமத்துவம் எனும் கோட்பாடு. உள்ளம் உண்மையை உரைத்த போதிலும் செயலில் அதைக் காட்ட மனிதர்கள் தயாராக இல்லை. மனித குலம் ஒன்று என்பதை செயலளவில் வெளிப்படுத்தும் போது அவர்கள் பல வசதிகளையும் சலுகைகளையும் இழக்க வேண்டும். வாய்ப்புகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடக்கி ஆள்வதற்கும் நசுக்குவதற்கும் ஆட்கள் கிடைக்காத நிலை உருவாகும்.

பேதம் ஒழிந்தால் பாதகமே என்று எண்ணி மனித குலசமத்துவத்தை எல்லா வகையிலும் எதிர்த்தே வந்திருக்கின்றார்கள். ஆதிக்காரர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட இனத்தினரும் கூட அவர்களுக்குள்ளேயே சில பிரிவினரை சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, பேதங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனது தோள்களின் மீது ஏறி நிற்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் ஏறி நிற்பதற்கு ஒரு தோள் வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றார்கள்.

மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் உங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிமுகப் படுத்திக் கொள்வ தற்காகவே உங்களைப் பல்வேறு பிரிவினராகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியம் வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம் அஞ்சி வாழ்பவர்தான். (அல்குர்ஆன்.)

இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக உலகம்தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. காலப் போக்கில் அதில் மாசு படிந்த போது அவ்வப்போது தீர்க்க தரிசிகள் இறைத் தூதர்கள் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் இறுதியானவர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். சிலர் அரேபியாவிலே இஸ்லாம் தோன்றியதால் அது அரபுகளுக்குரியது என்பர். அவ்வாறல்ல.. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இஸ்லாம்.

சமய, சமூக, பண்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து வழிபாடுகளுக்கும் எல்லா மதங்களும் உரிமை கொடுக்கின்றன எனினும் இன்று ஒரு சில மதங்களை பார்க்கின்றபோது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புமே ஏட்படுகிறது. இன்று நாம் இலங்கை தீவில் நடக்கின்ற,ஒரு மதத்தை இழிவு அல்லது கொச்சைப் படுத்துகின்ற செயலைப் பார்க்கின்றபோது எமக்கு திண்ணமாக அவர்கள் மீது கோபாம்,வெறுப்பு வருவதில்லை மாறாக அவர்களது மதம்,இனம் தேசத்தின் மீதே என்பதும் தெளிவானதே அவை சர்வதேச ரீதியால் ஆராயும்போது ஒட்டு மொத்த தீவிரவாத்தை வெளிக்காட்டும்.

இன்று நாடளாவிய ரீதியிலும்,உலகளாவிய ரீதியிலும், மதத்தை தூற்றுவதிலும்,தூண்டி விடுவதிலுமாய் இருக்கின்றனர் அவ்வாறே அவர்கள் மார்க்கம் சரி என்றால் அகிம்சை வழியில் போராடச் சொல்லுங்கள்...! இவற்றால் ஒருத்தர் அல்லது ஒரு தேசம் மாத்திரம் கெட்ட பெயர் எடுக்காது அதனைச் சார்ந்த மதமுமே என்பதை நன்கு உணர,உணர்த்தப்பட வேண்டும் என்றாலும் இஸ்லாம் இவ்வாறு –

'மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். ' (60:8)

இஸ்லாம் அகிம்சையான,அமைதியான போராட்டத்தையே விரும்புகின்ற அதே சமயம் ஒரு போதும் எவரையும் வட்புறுத்துவதுமில்லை ஆதலால் இன்று படித்த மட்டங்களே இஸ்லாத்தில் நுழைக்கின்றமை ஒரு நட் சான்று.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2-256)

எனவே இஸ்லாம் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்று யாரையும் பலவந்தப் படுத்துவதில்லை. எனினும் அதிலுள்ள நற்பயன்களை உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது,அழைப்பு விடுக்கின்றது இன மத மொழி தேச ரீதியாக பிரித்துப் பார்க்காமல் ஒரு தை குளாமாய் வாழ எத்தனிக்க வேண்டும்

நீ இழிவாக்குவது உன்னையல்ல உன் மதத்தையும் தேசத்தையும்தான்

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." (109:06)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19863
மொத்த பார்வைகள்...2218048

Currently are 463 guests online


Kinniya.NET