வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

இலங்கை கிரிக்கட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 2.5 கோடி ரூபா சன்மானம்!!

cri

இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 250 லட்சம் ரூபா வீதம், மொத்தமாக 15பேர் கொண்ட அணிக்கு 2.8 மில்லியன் அமரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

உலகக்கிண்ணம் நமது கையில்..!!

ATA3

பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு, உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்திக்கொண்டது இலங்கை.

   

டி20 உலகக் கோப்பை: மே.இ.தீவுகளை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இலங்கை

sl

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

மழையால் ஆட்டம் முழுமையாக நடைபெற முடியாத அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

   

முள்ளிப்பொத்தானை பாத்திமா மகளிர் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

mulli

முள்ளிப்பொத்தானை தி/பாத்திமா மகளிர் மஹா வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் அதிபர் ஏ.ஆர்.சாதிகீன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத் அவர்களும் சிறப்பு விருந்தினராக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

   

நாவிதன்வெளி இளைஞர் கழகங்களிற்கிடையிலான விளையாட்டுப் போட்டி

nathan11

(எம்.எம்.ஜபீர்)

26ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களிற்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மத்தியமுகாம் றாணமடு இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.

   

மாலின்துறை மெல்பேன் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாக தெரிவு!!

u1

கிண்ணியா மாலின்துறை மெல்பேன் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாக தெரிவும் கடந்த 23.03.2014 அன்று செயலாளர் ஜி.எஸ். ரிஸ்வி தலைமையில் நடைபெற்றது.

   

WT20: தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 ஓட்டங்களினால் இலங்கைக்கு வெற்றி

aaa

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 10 சுற்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

   

மஹேல, சங்கங்ககார ஓய்வு பெறும் தீர்மானத்தை தனக்கு அறிவிக்காமை குறித்து ஜயசூரிய கவலை.!

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்காரவும் மஹேல ஜயவர்தனவும் சர்வதேச இருபது20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமை குறித்து இலங்கைக் கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரான சனத் ஜயசூரிய ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

4797aaaaaaaaa

பங்களாதேஷில் நடைபெறும் உலக இருபது20 போட்டிகளின் பின்னர் சர்வதேச இருபது20 போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக மஹேல ஜயவர்தன டுவிட்டர் மூலம் அறிவித்தார். அதேவேளை குமார் சங்கக்கார ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் மூலம் தனது தீர்மானத்தை அறிவித்தார்.

   

முள்ளிப்பொத்தானை 'சிராஜ் ஸ்போட்ஸ் பியஸ்ட்ரா' 2014

s1

முள்ளிப்பொத்தானை தி/சிராஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் 'சிராஜ் ஸ்போட்ஸ் பியஸ்ட்ரா' எனும் தொனிப்பொருளில் அதிபர் எம்.எச்.எம்.நஜாத் அவர்களின் தலைமையில் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் மற்றும் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

   

பிர்லியன் விளையாட்டுக் கழகத்தினர் 29 மேலதிக ஓட்டங்களினால் வெற்றி

fb

(அகமட் எஸ். முகைடீன்)

எயா விங்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான அணிக்கு ஏழுபேர் கொண்ட ஆறு ஓவர் எயர் விங் மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி  (16.03.2014) இறக்காமம் குளக்கரை மைதானத்தில் எயா விங்ஸ் நிறுவனத்தின் கிழக்கு மாகாண செயல்திட்ட முகாமையாளர் அப்துல் சலாம் முனாஸ் தலைமையில் நடைபெற்றது.

   

நிந்தவூர் பிரதேச செயலக உதை பந்துப் போட்டி

1

 

நிந்தவூர் பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான கால்பந்துப் போட்டி 2014 - 03 - 15 அன்று நிந்தவூர் பொது மைதானத்தில் நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பமானது. ஏழு கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் நிந்தவூர் கென்ட் மற்றும் நிந்தவூர் லகான் ஆகியன இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. விறுவிறுப்பான இப்போட்டி 0 - 0 என்ற சம நிலையில் முடிவுற்றதை அடுத்து பெனால்டி முறை மூலம் கெண்ட் விளையாட்டுக் கழகம் 3 - 2 என்ற நிலையில் வெற்றி பெற்று 2014ம் ஆண்டுக்கான நிந்தவூர் பிரதேச செயலக உதைபந்தாட்டப் போட்டியில் சாம்பியனாகத் தெரிவாகியது.

   

பக்கம் 6 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19334
மொத்த பார்வைகள்...2076258

Currently are 245 guests online


Kinniya.NET