வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

திருமலையில் பரீட்சார்த்த கோவா உற்பத்தி வெற்றியளிப்பு

eb74109ba03b320d4305bb07b602d0cb L[1]

திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா பிரதேசத்தில் வில்கமுல்ல சந்தி கிராமத்தில் பரீட்சாத்தமாக பயிர்செய்யப்பட்ட கோவா உற்பத்தி வெற்றியளித்துள்ளது.

 

வில்கமுல்ல சந்தியைச்சேரந்த 68 வயதுடைய வீரசிங்க என்பவருடைய தோட்டத்திலேயே இவ் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது ஜீவனோகபாய தொழிலாக விவசாயம் காணப்படுவதாகவும் சுழற்சி முறையில் பல்வேறு பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீர்ப்பாசனம் தடையின்றி மேற்கொள்வது தான் எதிர் நோக்கும் பாரிய சவாலாக அமைந்துள்ளதாகவும் வீரசிங்க கூறினார்.

அறுவடை செய்யப்பட்ட உற்பத்திகள் சந்தை வாய்ப்புக்கு விடுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் உரிய விலை கிடைப்பதில்லை என்றும் நீர்ப்பாசன வசதியும் சந்தை வாய்ப்பும் தமக்கு உரிய முறையில் கிடைக்குமாயின் மேலும் சிறப்பாக பல உற்பத்திகளை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19333
மொத்த பார்வைகள்...2076257

Currently are 243 guests online


Kinniya.NET