வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

குச்சவெளி கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி

IMG 2832

 

திருகோணமலை கல்வி வலயம் குச்சவெளி கோட்டம் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை 09.04.2015 நிலாவெளி பொது மைதானத்தில் நடைபெற்றது. 21 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கு கொண்டார்கள். நிலாவெளி அல் பக்தா முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியன் நிலையினையும், முகமதியா முஸ்லிம் வித்தியாயலயம் இரண்டாம் நிலையினையும் பெற்றுக் கொண்டன. சேவைக்கால பயிற்சி ஆசிரியர் ஆலோசகர் செல்வி. வி.வியாகராஜா இப்போட்டிகளை ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்திருந்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு உதவிச் செயலாளர் எம்,கெ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன்கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர். குச்சவெளிக் கோட்டப் பணிப்பாளர் திரு.செல்வநாயகமும் கலந்துகொண்டார்

 (றபாய்தீன்பாபு ஏ.லத்தீப்)

IMG 2845

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19329
மொத்த பார்வைகள்...2076253

Currently are 239 guests online


Kinniya.NET