வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்டச் செயலக அணி வெற்றி

Cricket

கிழக்கு மாகாணசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்டச் செயலக அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் (25) திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் கிழக்கு மாகாண அணியினருக்கும் மாவட்ட யெலக அணியினரிற்கும் இடையிலே இப்போட்டி நடைபெற்றது.

கிழக்கு மாகாண பதவி நிலை உத்தியோகத்தர் அணிக்கும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர் அணியினரிற்கும் இடையிலான போட்டியில் கிழக்கு மாகாண பதவி நிலை உத்தியோகத்தர் அணியினர் அபார வெற்றியை பெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கான கேடயங்களை கிழக்கு மாகாண காணி காணி அபிவிருத்தி வீதியபிவிருத்தி தொடர்பான அமைச்சர் ஆரியவதி கலப்பதி வழங்கினார்.

இந்நிகழ்விலே கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத்த அபேகுணவர்தனஇ மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா- மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஷ்வரன்- மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்- பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19329
மொத்த பார்வைகள்...2076253

Currently are 240 guests online


Kinniya.NET