வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

துடுப்பாட்ட வீரர் ஜோனதன் ட்ரொட் ஓய்வு!

8e9782eb5c3b4e51b8ee1ddd7e8f9f4a XLஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரரான ஜோனதன் ட்ரொட் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோனதன்ட்ரொட். இவரது அதிரடியான மற்றும் அற்புதமான துடுப்பாட்டங்களை மக்களால் எளிதில் மறக்க முடியாது. அந்தளவுக்கு துடுப்பாட்டத்தின் திறமையால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவராவார்.

2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இணைந்த ட்ராட், 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 835 ஓட்டங்களை பெற்றுள்ளார். அத்துடன், 68 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 2 ஆயிரத்து 819 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் பங்குபற்றிய இவர் 6 இன்னிங்சில் விளையாடி வெறும் 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார். இந்நிலையிலேயே ட்ரொட் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19333
மொத்த பார்வைகள்...2076257

Currently are 246 guests online


Kinniya.NET