வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விலங்குகளின் குடியகல்வுகள் குறித்து விஞ்ஞானிகள் மறந்துபோன அடிப்படை

80162.adapt.768.1[1]

 

-முஹம்மது ராஜி.

 

 

பீ பீ சி இல் வரிக்குதிரை (ஷீப்ரா ) களின் பிரமாண்டமான குடியகல்வு
குறித்த ஒரு காணொளி ஒன்றை இன்று காணக்கிடைத்தது .

ஆபிரிக்காவில் பொட்ஸ்வானா என்ற நாட்டில் உள்ள மக்கடிக்காடி என்ற தேசிய பூங்காவில் இருந்து நாயி பாண் தேசிய பூங்காவுக்கு ஜுலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே
சுமார் 25 ஆயிரம் வரிக்குதிரைகள் குடியகல்வு செய்கின்றன . இரு பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 300 மைல்கள்.

அழகான காணொளி அது .
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரிக்குதிரைகளின் கழுத்துக்களில் சட்டலைட் ட்ரக்கர்கள் பொருத்தப்பட்டு
ஜீ. பி .எஸ் முலம் அவற்றின் குடி அகல்வுகள் அவதானிக்கப்படுகின்றன . நாயி பாண் தேசிய பூங்காவில் மழை கிடைக்கும் சரியான காலப்பகுதியில் அவை சரியான நேரத்தில்
வந்து சேருகின்றன .

இது எவ்வாறு சாத்தியம் ?
வரிக்குதிரைகளுக்கு யார் இவற்றை எல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள் ?
என்பன அவர்களின் விடை காண முடியாத கேள்விகள் ..

பல்லாண்டு காலமாக இடம்பெறும் இந்த குடிஅகல்வு ஆச்சரியமான ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து. வரிக்குதிரைகளின் 'ஜீன்' களால் இது பரிமாற்றப்பட்டு இருக்கலாம் என கடைசியில் சந்தேகத்துடன் முடிவு எடுக்கிறார்கள்...

வரிக்குதிரைகள் மட்டுமல்ல உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும்
பல வகையான விலங்குகள் , பறவைகள் ஆகியன காலநிலை, உணவு உட்பட பல்வெறு நோக்கங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குடி அகல்வு செய்கின்றன.
சில பறவைகள் சில காலங்களில்
கடல் கடந்து நாடு விட்டு நாடு கூட நகர்கின்றன.

உயிரினங்கள் அனைத்தையும் படைத்த
எல்லாம் வல்ல அல்லாஹ் அவற்றுக்கு இரணம் அளிக்கும் பொறுப்பை தன்னகத்தே கொண்டுள்ளான் .

படைத்தவன் இரணம் அளிப்பான் என பறவைகள் கூட்டுக்குள் அடைப்பட்டு கிடைப்பதில்லை .அதற்கு கூறப்பட்ட படி இறைவனால் வழங்கப்பட்ட அறிவின் பிரகாரம் இரை தேடி அலைகின்றன .
கடைசியில் அதற்கு உணவை அல்லாஹ் அளிக்கிறான் .


தாயின் மார்பின் முலையில் வாயை வைத்து சூப்பினால்தான் குடிப்பதற்கு பால் வருமென பிறந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்தது யார் ?

அதேபோல மழை வீழ்ச்சி உள்ள பகுதிக்கு நகர்ந்தால்தான் உண்பதற்கு புல்லும் அருந்துவதற்கு தண்ணீரும் கிடைக்கும் என்ற , அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அறிவுக்கு அமைய
பலநாட்கள் பயணம் செய்து வரிக்குதிரைகள் அந்த இடத்தை அடைகின்றன .

எதற்கும் காரணம் தேடி அலையும் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் படைத்தவனை மட்டும் ஒவ்வொரு முறையும் மறந்து போய் விடுகிறார்கள்


 

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19335
மொத்த பார்வைகள்...2076259

Currently are 284 guests online


Kinniya.NET