வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

அகில இலங்கை கிரிக்கட் சம்பியன்; கிண்ணியா மத்திய கல்லூரி .!

kcc2

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கட் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றிபெற்று அகில இலங்கை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற இருதிப்போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி 8 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எதிர்த்துஆடிய ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தை ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்று கிண்ணியா மத்திய கல்லூரி அகில இலங்கை கிரிக்கட் சம்பியன் பட்டத்தை தனதாக்கிகொண்டது.

தேசிய ரீதியில் கிண்ணியா மண்ணிற்கு பெருமையை தேடித்தந்த கிண்ணியா மத்திய கல்லூரி வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் கிண்ணியா மக்கள் சார்பில் முன்னாள் கி.மா.முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப், அப்துல்லா மகரூப், எம் தௌபீக், முன்னாள் நகர பிதா DR ஹில்மி மகரூப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

kcc1

kcc3

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19332
மொத்த பார்வைகள்...2076256

Currently are 245 guests online


Kinniya.NET