வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

சீதுவை பாதுகாப்பு படை தலைமையகத்தில் விசேட பரா விளையாட்டுப் போட்டி

da3bded44e

சீதுவையில் உள்ள விசேட படையணித் தலைமை வீரர்களால் இடம் பெற்ற பரா விளையாட்டுப் போட்டிகள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

சீதுவை படைத் தலைமையகத்தில் நேற்று காலை இடம்பெற்ற இப்போட்டிகளில் கோப்பிரல் ஜெ ஏ எம் பி ஜயகொடி தமது திறமையினை வெளிக்காட்டியுள்ளார்.

ஆசிய சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இடம்பெற்ற படகோட்டப் போட்டிகளிலும் கோப்பிரல் ஜெ ஏ எம் பி ஜயகொடி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இராணுவ பரா ஓட்டப் போட்டிகளிலும் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு மரணித்த மற்றும் அங்கவீனமுற்ற விசேட படை வீரர்களது பிள்ளைகள் 11பேரிற்கு புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டது.

இதன்போது குறித்த படைத் தலைமையத்தில் சேவையாற்றும் சிவில் சேவகர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் விசேட படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் அசங்க பெரேரா, படைத் தலைமைய சென்டர் கெமடான்ட் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க , கட்டளை அதிகாரியான பிரிகேடியர் செனரத் யாபா , பிரதி சென்டர் கெமடாண்ட் கேர்ணல் சந்திமால் மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட படை வீரர்களது குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19329
மொத்த பார்வைகள்...2076253

Currently are 239 guests online


Kinniya.NET