வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

இந்தியக் குழாமில் மொஹமட் ஷமி

image e5a0560f51

தென்னாபிரிக்காவுக்கெதிரான ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹமட் ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 இதேவேளை, இலங்கைக்கெதிரான தொடரில் ஓய்வு பெற்ற அணித்தலைவர் விராத் கோலி அணிக்குத் திரும்பியுள்ளதோடு, பின் தொடைத் தசைநார் காயம் காரணமாக இலங்கைத் தொடரைத் தவறவிட்ட கேதார் யாதவ்வும் அறிவிக்கப்பட்ட குழாமில் இடம்பெற்றுள்ளார்.

குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா (உப அணித்தலைவர்), ஷீகர் தவான், அஜின்கியா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதார் யாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), அக்ஸர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா, மொஹமட் ஷமி, ஷர்துல் தாக்கூர்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 245 guests online


Kinniya.NET