வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

வென்றது மன்செஸ்டர் சிற்றி

image 761c184b0d

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

மன்செஸ்டர் சிற்றி, 4-0 என்ற கோல் கணக்கில் ஏ.எவ்.சி போர்ண்மெத்தை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக சேர்ஜியோ அகுரோ இரண்டு கோல்களையும் ரஹீம் ஸ்டேர்லிங், டனிலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 3-0 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் ஹரி கேன் பெற்றார்.

மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜூவான் மாத்தா பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாக ஜேமி வார்டி, ஹரி மகூரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

செல்சி, எவெர்ற்றன் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற லிவர்பூல், ஆர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக பிலிப்பி கூட்டின்யோ, மொஹமட் சாலா, றொபேர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்சனல் சார்பாக, அலெக்ஸிஸ் சந்தேஸ், கிரனிட் ஸாகா, மெசெட் ஏஸில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இப்போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், 55 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் 42 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. 35 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூல் இருக்கின்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் ஆர்சனலும் தலா 34 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே ஐந்தாம், ஆறாமிடங்களிலிருக்கின்றன

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 244 guests online


Kinniya.NET