வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

ஜனவரி 15 இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

Sri Lanka_Cricket

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் நோக்கில் பயிற்சிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவுக்கு உட்பட்ட வீரர்கள், உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று புதிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சிப் பிரிவுக்காக தற்போது தேசிய மட்டத்தில் முன்னணியில் இருக்கும் 23 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவின் ஊடாக வீரர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளாதாக சந்திக ஹத்துருசிங்ஹ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், ஸிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி ஜனவரி மாதம் 15ம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 243 guests online


Kinniya.NET