வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2019
   
Text Size

அதலடிக்ஸ் போட்டிகளில் மனிதனுடன் மிருகங்கள் போட்டியிட்டால் என்ன ஆகும்?

d3aaf0a6a78be81181060a2bd875a82e

நூறுமிட்டர் ஓட்டபந்தய வீரர் உசைன் போல்ட். மணிக்கு 43 கிமி வேகத்தில் ஓடுவார். ஆனால் உஙள் வீட்டில் வளர்க்கும் பூனையால் அவரை விட வேகமாக ஓடமுடியும். நாய் மணிக்கு 55 கிமி வேகத்தில் ஓடும். ஆக உசைன்போல்ட்டை தெருநாய் துரத்தினால் அவரால் ஓடித்தப்பிக்க முடியாது. கடிவாங்க வேண்டியதுதான்.

உலகநீச்சல் சாம்பியன் மணிக்கு எட்டு கிமி மட்டுமே நீந்தமுடியும்...நீச்சல் நம் இயல்பு அல்லவே? உலகின் அனைத்து வகை மீன்களும் நம்மை நீச்சலில் தோற்கடித்துவிடும்.

உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் என அனைத்திலும் நாம் மிருகங்களிடன் கேவலமாக தோற்போம்.

நாம் ஜெயிக்ககூடிய போட்டி ஒன்றே ஒன்றுதான்.

மரதான் ஓட்டம்...அதிலும் அல்ட்ரா மரதான் ஓட்டம்.

அல்ட்ரா மரதான் ஓட்டம் என்பது 80 கிமிக்கும் அதிகமான ஓட்டம்.

இத்தனை தூரம் நிற்காமல் ஓடகூடிய பிராணிகள் உலகில் ஏதுமில்லை. குதிரைகள் மட்டுமே கொஞ்சம் அருகே வரும்.

மனிதனுக்கும், குதிரைக்குமான ஓட்டபந்தயபோட்டிகள் உலகில் பலநாடுகளில் நடைபெறுகின்றன. துவக்கத்தில் குதிரைகள் வேகமாக ஓடும். மனிதர்கள் பின்னாலே ஓடவேண்டியதுதான். 21வது மைலில் மனிதன் குதிரையை பிடித்துவிடுவான். குதிரை பிந்தங்கிவிடும். குதிரையால் ஓடமுடியாமல் கீழே விழும் தொலைவையும் தாண்டி மனிதனால் ஓடமுடியும். உலக ரெகார்டு ஒரே நாளில் 161 கிமி....இத்தனை தூரம் நிற்காமல் ஓடு பிராணி உலகில் ஏதுமில்லை. மெக்சிகோவின் ரவுமாரி பூர்வகுடிகள் நிற்காமல் தொடர்ச்சியாக 400 கிமி ஓடுவார்கள்.

அதிலும் வெப்பம் அதிகமாக ஆக மிருகங்களின் ஓட்டபந்தய தொலைவு குறைந்துவிடும்.

சரி....ஒரு சிங்கம் நம்மை துரத்தினால் 42 கிலோமீட்டருக்குள் பிடித்துவிடாது? இப்படி தொலைதூர ஓட்டத்தால் என்ன பலன் என கேட்கிறீர்களா? :-)

தொலைதூர ஓட்டத்தின் பலன் ஓடிதப்புவதில் அல்ல. வேட்டையாடுவதிலேயே இருக்கிறது.

பூர்வகுடிகள் ஒரு மானை குறிவைப்பார்கள். அதன்பின் அதை நோக்கி ஓடதுவங்குவார்கள். மான் வேகமாக ஓடிவிடும். இவர்கள் மான் கண்பார்வையில் இருந்து மறைந்துவிடாமல் இருக்கும் வேகத்தில் ஓடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து மான் களைப்படையும். மனிதர்கள் நிற்காமல் ஓடுவார்கள். மான் ஓய்வெடுப்பதும், பின் ஓடுவதுமாக இருக்கும். ஒரு 10,15 கிமி போனபின் அதனால் ஓடமுடியாது. அசதியில் கீழே விழவேண்டியதுதான். அதன்பின் அதை கொன்று எடுத்துவந்துவிடுவார்கள்.

இம்மாதிரியான வேட்டைமுறைக்கு பெர்சிஸ்டன்ஸ் ஹண்டிங் என பெயர்.

சுமாராக 2- 3 மணிநேர ஓட்டம் தினம். ஆனால் 100% வெற்றி நிச்சயம். அம்பு, ஈட்டியால் வேட்டையாடுவதை விட இதில் துல்லியம் மிக அதிகம்.

ஆக நாம் ஓடபிறந்தவர்கள்...இப்படிப்பட்ட சூப்பர்பவரை வைத்திருந்தும் அதை சோபாவில் படுத்துக்கொண்டு டிவி பார்த்து வீண்டித்து உடல்நலனையும் கெடுத்துக்கொள்வதை என்னவென சொல்ல?

எழுந்திருங்க...ஓட ஆரம்பிங்க :-)

You were born to run long distances :-)

நன்றி: செல்வன் 

Share
comments
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...29123
மொத்த பார்வைகள்...2307682

Currently are 336 guests online


Kinniya.NET