வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

மக்கள் குரல்

இது மக்களுக்கான பக்கம். இங்கு ஒலிப்பது மக்களின் குரலே! பொதுமக்கள் உங்கள் குறைகளையும், ஆதங்கங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இப்பகுதியில் வெளிவரும் ஆக்கங்கள் தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குழுவையோ நேரடியாக தாக்குவதாக அமைந்தால் அது பற்றி உரியவர்கள் உடனடியாக கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு அறியத்தருமிடத்து அவ்வாக்கம் நீக்கப்படும்.


மூதுார் பள்ளிக்குடியிருப்பு கிராம வீதிகள் எப்போது புனரமைக்கப்படும்?

road

திருகோணமலை, மூதுார் பிரதேசத்தில் பள்ளிக்குடியிருப்பு கிராம வீதிகள் கடந்த 30 வருட யுத்தத்தின் பின் இதுவரை புனரமைக்கப்படவில்லை. தோப்புர் மற்றும் பள்ளிக்குடியிருப்பை இணைக்கும் 2 கிலோ மீற்றர் வீதி குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

 

கிண்ணியா ஹிஜ்ரா வீதியை புனரமைக்க வேண்டுகோள்

IMG 1424

 கிண்ணியா நகர சபைக்குட்பட்ட ஹிஜ்ரா வீதியை புனரமைத்து தரும் படி பிரதேச மக்களும், வாகன சாரதிகளும் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

புல்மோட்டை சன சமூக நிலையத்தின் இன்றைய அவலநிலை!

pul1

-டீன் பைரூஸ்-

 

புல்மோட்டை: புல்மோட்டை ஜின்னா நகர் பிரதான வீதியில் சமூக பயன்பாட்டிலிருந்து வந்த 'ஜின்னா நகர் சன சமூக நிலையம்' இன்று கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரின்றி மாதங்கள் பல செல்கின்ற நிலையில் மிருக-ஊர்வனங்களின் தங்குமிடமாக அது மாறி இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

கிண்ணியா கட்டையாறு உறவுப்பாலம் சிதைவடையும் அபாயம்!!

Kattaiyaaru Bridge01

சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் இணைக்கும் கட்டையாற்றுப் பாலம் சேதமடைந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதைப் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு திருகோணமலையில் ஒரு அலுவலகம் இல்லை ...!

slmc1[1]

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மக்களின் அதிக பெரும் பான்மையான வாக்குகளை பெற்று கடந்த தேர்தல் மூலம் தலைவர்களை பெற்று இருந்தாலும் மக்களின் குறைகளையும், தேவைகளையும் முறைப்பாடு செய்யக் கூடிய ஒரு அலுவலகம் இதுவரை இல்லை.

 

இந்த வருடமாவது கிண்ணியாவுக்குள் திரும்புமா கங்கை!

250px-Mahaweli Ganga_by_Gampola[1]

திருகோணமலை கொட்டியாராக்குடாவில் விழும் கங்கை நதியினை கிண்ணியா கிராமத்துக்குள் திருப்பி விடுவதாக கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மேடைகளில் பிரச்சாரம் செய்த திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரை பதவி கிடைத்த பிறகு காணவில்லை என மக்கள் கவலையடைகின்றார்கள்.

 

கிண்ணியா பிரதேச சபையின் கவனத்திற்கு – கேணியடி பாலத்தினை திருத்துங்கள் !

10102

கிண்ணியா பிரதேச சபைக்கு உற்பட்ட காக்காமுனை 7ம் வட்டார கேணியடி வீதியில் காணப்படும் பாலம் பல வருடங்களாக உடைந்து காணப்படுகின்றது. இப் பிரதேச மக்களால் இப் பாலத்தினை திருத்த நடவடிக்கை எடுக்கும் படி உறிய அதிகாரிகளிடம் பல தடவைகள் முறையிட்ட போதும் உரிய அதிகாரிகள் மூன்று வருடங்களாகியும் எந்த நடவடிக்கையும் இதுவவரை எடுப்படவில்லை.

 

கிறிஸ் மனிதனால் கால் இழந்த கிண்ணியா முகம்மட் சப்ராஸ்க்கு உதவுங்கள்!

111

"ஊருக்காக தன் காலை கொடுத்தவனுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப்போகிறீர்கள்??"

2011 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஞாயிறு இரவு 8 மணியளவில் வீடொன்றின் சமையலறைக்குள்ளிருந்த பெண்ணை முக மூடி அணிந்த ஒருவர் யன்னல் ஊடாக கூப்பிட்டுள்ளார். அவரைக் கண்ட அப்பெண் அவலக் குரல் எழுப்பவே அயலவர்கள் அங்கு வர முக மூடிய கிறிஸ் மனிதன் தப்யோடிவிட்டார். அவரைத் தேடியபோதும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதே நேரம் இரவு 11 மணியளவில் பைசல் நகரில் வீடொன்றில் தனிமையிலிருந்து பெண்ணை ஒருவர் யன்னல் ஊடாகக் கத்தியைக் காட்டி மிரட்டவே அப்பெண்ணும் அவலக் குரல் எழுப்பியுள்ளார். அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வரவே கிறிஸ் மனிதன் தப்பியோடியுள்ளார்.

 

கோடையில் மணற்புயலும்; மாரியில் வெள்ளபெருக்கும்! கிண்ணியா - தம்பலகாமம் வீதியின் தொடரும் அவலம்!!

Kinniya-Thambalagama-01

கோடை காலப் படங்கள்

கிண்ணியாவில் இருந்து தம்பலகமம் ஊடாக கொழும்புக்கு சொல்கின்ற 14 கி.லோ மீட்டர் வீதியானது மழை காலங்களில் வாய்க்கால் போன்ற நிலையிலும்; கோடை காலங்களில் வாகனம் போகும் போது மணல் புயல் வீசுகின்ற நிலையிலும் காணப்படுகின்றது.

 

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம் இந்து மயான வீதியின் அவலநிலை!!

AAlankerny01

திருகோணமலை கிண்ணியா நகர சபைக்குட்பட்ட ஆலேங்கேணி ஈச்சந்தீவு ஊடாக பாரதிபுரம் இந்து மயானத்திற்குச்செல்லும் வீதி இரு பக்கங்களும் ஆற்று நீரினால் மூழ்கியுள்ளதால் அவ்வழியின் ஊடாக பிரேதங்களை எடுத்துச்செல்வதில் மிகவும் அசௌகங்கரியங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலேங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் 480 குடும்பங்களும், ஈச்சந்தீவு கிராம சேவையாளர் பிரிவில் 280 குடும்பங்களும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கிண்ணியா நகர சபைக்குட்பட்ட இந்து மயானம் இது என்பதால் இப்பகுதியிலுள்ள இந்து மக்கள் இம்மயானத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல்காலங்களில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் பல அபிவிருத்தி திட்டங்களை செய்வோம். இன,மதம் பாகு பாடு காட்டமாட்டோம்.அனைவரும் ஒரே சகோதரத்துவத்துடன் வாழ்வோம்.நீங்கள் எமக்கு வாக்களியுங்கள் என்று கூறியவர்கள் இன்று அரசியல் கதிரைகளில் உயர் அதிகாரங்களில் இருக்கின்றனர். இருந்தும் குறைபாடுகள் குறித்து கவனிக்க வில்லை;

எனவே இது குறித்து நகர சபை கூடிய கவனம் எடுக்க வேண்டுமென ஆலங்கேணி,ஈச்சந்தீவு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்,பன்குளம்)

AAlankerny02

 

காலதாமதமாகி வரும் ஆசிரியர்களால்; கல்வியில் ஆர்வமின்றிபோகும் மொறவெவ மாணவர்கள்!

SL realp_8[1]

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மொறவெவ பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் காலதாமத வரவினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

   

எட்டு வருடங்கள் கழிந்தும் இன்னும் கொட்டிலில்....

tsunami01

சுனாமி பேரலையினால் பாதிப்புக்குள்ளான மூதூர் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த 80ற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எவரும் முன்வர வில்லையென விஷனம் தெரிவிக்கப்படுகிறது.

   

கிண்ணியாவில் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நடவடிக்கை அதிகரிப்பு!

child labor

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நடவடிக்கை அதிகரித்துக்காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை செல்லும் சிறுவர்கள் ஆரம்பத்தில் பின்னேர வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் வேலைக்கு சென்றுவிடுகின்னர்.

   

கிண்ணியா பொதுநூலகத்தின் குறைபாடுகளும் அதற்கான தீர்வுகளும்...

kinniya Library

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தின் இயற்கைச் சூழல் பொருந்தியதொரு இடத்தில் கிண்ணியாவின் கம்பீரம் காத்து நிற்கிறது கிண்ணியா பொது நூலகம்.

நூலகம் இல்லாத ஊர் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும் என்பதைப் போல கிண்ணியாவில் பொது நூலகம் காணப்பட்டாலும் அந்நூலகத்திலுள்ள குறை பாடுகளை மையப்படுத்தி அந்நூலகத்தைப் பாழடைந்த வீட்டுக்கு ஒப்பிடலாம்.

   

பக்கம் 2 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 245 guests online


Kinniya.NET