வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா ஹிஜ்ரா வீதியை புனரமைக்க வேண்டுகோள்

IMG 1424

 கிண்ணியா நகர சபைக்குட்பட்ட ஹிஜ்ரா வீதியை புனரமைத்து தரும் படி பிரதேச மக்களும், வாகன சாரதிகளும் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட ஹிஜ்ரா வீதி மிக நீண்ட காலமாக குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இந்த வீதியால் பல நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் இவ் வீதியால் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர்.

தூர இடங்களில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வரும் மாணவர்கள் இவ்வீதியால் செல்லம் போது, இவ்வீதியால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியில் கூட பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் துவிச்சக்கர வண்டியை தள்ளிக்கொண்டு செல்லும் நிலைமையிலேயே இங்கு காணப்படுகின்றது.

குறிப்பாக மழை காலங்களில் பாடசாலை மாணவர்கள் இவ்வீதியால் செல்லும்போது பாடசாலை சீருடை அழுக்கடைந்து விடுவதால் இவ்வீதியால் செல்ல முடியாமல் வேறு பாதையை நாடிச் செல்கின்றதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இவை தொடர்பான உயரதிகாரிளும் இவ்வீதியை கவனத்திற்கொண்டு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

 (எம்.பைஷல் இஸ்மாயில்)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19338
மொத்த பார்வைகள்...2076262

Currently are 289 guests online


Kinniya.NET