வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் நிர்மாணித்த மாஞ்சோலை பாலம் இடிந்து விழும் நிலையில்!

DSC03347

கிண்ணியா மாஞ்சோலைப் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கனரக வாகனங்க செல்ல முடியாதுள்ளதுடன் சாதாரண வாகனங்களும் பயணிகளும் அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.

இப்பாலம் கிண்ணியா பிரதான வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது மட்டுமல்லது  பைசல் நகர், முனைச்சேனை , மஃரூப் நகர் , குட்டிக்கரச், ஆலங்கேணி ஆகிய பிரதேச மக்களின் போக்குவரத்தையும் இலகு படுத்துகின்றது

சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் இணைக்கும் நோக்கத்துடன் மறைந்த அப்துல் மஜீத் அமைச்சராக இருந்தபோது  நிர்மாணிக்கப்பட்ட இப் பாலம்  இடிந்து விழும் நிலையில் பல வருடங்களாக இருந்த போதும்   இதுவரை எதுவித திருத்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பித்தக்கது. 

 இப் பாலமானது மேற்பகுதி சேதமடைந்த நிலையில் நீரினுள் உள்ள தூண்களும் சிதைவடைந்து காணப்படுவதனால் எப்போதும் இடிந்து விழுக் கூடிய அபாய நிலை உள்ளதனால் இடிந்து விழும் போது இடம்பெறும் பாதிப்பினையும் சேதத்தினையும் தவிர்ப்பதுடன் இப் பகுதி மக்களின் நலனினையும் கருத்தில் கொண்டு இப் பாலத்தினை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

(கிண்ணியா நெட்)

DSC03342

DSC03348

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18572
மொத்த பார்வைகள்...2075496

Currently are 209 guests online


Kinniya.NET