வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்!!

mi2

கிண்ணியா கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பால் பதனிடும் நிலையத்தின் பழுதடைந்த பாலை சூரங்கல் ஆயுர்வேத வைத்தியசாலை வீதிக்கு அருகாமையில் வீசுவதால் பொதுமக்கள் பாரிய சுகாதார சீர்கேட்டினை எதிர்நோக்குவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

பழுதடைந்த பால் உரியமுறையில் அகற்றப்படாமல் மேற்படி பொதுமக்கள் நடமாடும் சூழலில் கொட்டப்படுவதால் அதனை அண்டிய பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடம், கிருமிதொற்றும் ஏற்பட அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால். அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளும், பாதசாரிகளும் இதன்மூலம் பாரிய அசௌகரியங்களை எத்எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே இப்பிரதேசத்தில் கழிவுப் பால் கொட்டும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கிண்ணியா  சுகாதார வைத்திய வைத்திய அதிகாரியிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியே,

கௌரவ கிண்ணியா பிரதேச சபை தவிசாளரே,

கௌரவ கிழக்குமாகாண கூட்டுறவு ஆணையாளரே,

கௌரவ கிழக்குமாகாண கூட்டுறவு அமைச்சரே,

இது உங்கள் கவனத்திற்கு....

mi3

mi1

mi4

ed

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18574
மொத்த பார்வைகள்...2075498

Currently are 220 guests online


Kinniya.NET