புதன்கிழமை, மே 22, 2013
   
Text Size

முத்துச் சிரிப்பில் முளை விடும் சிறுவர் பாடல்கள்


PT-azeezகிண்ணியா பிரதேசத்தில் பி.ரி. அஸீஸின் “உணர்வூட்டும் கவிதைகள்” கவிதைத் தொகுதியினைத் தொடர்ந்து மற்றுமொரு வெளியீடாக வந்திருப்பதுதான் “சிறுவர் பாடல்கள்” எனும் நூல்.


சித்திரமாவாயே.உன் அருகில் நானிருப்பேன்.பச்சைக்கிளி.சிட்டுக்குருவி.பிள்ளை.தாலாட்டு.பறக்குது.முத்து.பூமி எங்கும் மிளிரும்.புதுமைகள் செய்கிறாய்.காற்றோடு கலப்பேன்.இனிமை கொண்டாயே.ஆராரிரோ-ஆராரிரோ.சின்ன மாமா.ஆராட்டுகிறேன் உன்னை சீராட்டுகிறேன்.இன்பத்தை விதைத்திருக்கிறாய்.சுகங்கள் தருவேன் கலங்காதே போன்ற தலைப்புக்களை உள்ளடக்கி காத்திரமான பாடல்களை இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார்.இச் சிறுவர் பாடலிற்கு கவிஞர் ஏ.நஸ்புள்ளா அணிந்துரை வழங்கியுள்ளார்.
உன் அருகில் நானிருப்பேன் என்ற கவிதையைப் பொறுத்தவரையில் இக் கவிதையில் ஒரு தாய் தன் குழந்தையின் மூலம் பெறும் இன்பங்களை கவிஞர் இக் கவிதையினூடாகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
“வண்ணக் குழந்தை உந்தன் சிரிப்பில்
சுகங்கள் மலருமே
சிரித்து மகிழும் உன்னைக் காண
சொர்க்கம் திறக்குமே
எண்ணமெங்கும் அன்பு கொண்டு
நீ இருப்பாயே
எந்த நாளும் உந்தன் அருகில்
நானிருப்பேனே”

அதுமட்டுமல்லாமல் புதுமைகள் செய்கிறேன் என்ற கவிதையில் நாளைய சமுதாயத்தின் எதிர் பார்ப்புக்கள் பற்றி ஒரு சின்னஞ் சிறுவனை மையப் படுத்தி எழுதப் பட்டிருக்கிறது.அவனுடைய வளர்ச்சி தொடங்கி தலைமைத்துவம் செய்யும் வரை சின்னஞ் சிறு கவிதைக்குள் இது உள்ளடக்கப் பட்டிருப்பதுதான் புதுமை.
சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு இவருடைய கவிதைகள் நிச்சயம் பாரிய பங்களிப்புச் செய்யும் என்பது திண்ணம். அத்தோடு முத்தான பல பாடல்களை இலக்கிய உலகிற்கு வித்தாக வழங்கியிருக்கும் இவர் இன்னும் தலைத்தோங்க வாழ்த்துக்கள்.

புத்தகத்தின் பெயர்- சிறுவர் பாடல்கள்
ஆசிரியர்- பி.ரி. அஸீஸ்
விலை- 130.00
வெளியீடு- பாத்திமா ருஸ்தா பப்ளிகேசன்
தொடர்புகளுக்கு-0752101556
0772902042

கிண்ணியா நஸார் இஜாஸ்

Share
comments

Comments   

 
0 #1 Abu Areej 2012-04-24 19:32
may Allah the Almighty cure him and give him quick "shifa"
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...13014
மொத்த பார்வைகள்...215447

Currently are 46 guests online


Kinniya.NET