சனிக்கிழமை, மே 18, 2013
   
Text Size

என்னூர் அரசியல்வாதிகளின் அவதானத்திற்கு....!

Election

மரியாதைக்குரிய உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னொரு தேர்தலால் நம்மூர் களைகட்டப்போகிறது... எனக்கு நீண்ட நாளாகவே மனதினுள் ஒரு வினா தலைநீட்டிக்கொண்டேயிருக்கிறது. கேட்டுவிடலாமே என்று தோன்றிவிட்டது. கேட்டுவிடுகிறேன்.

திருமலை மாவட்டத்தின் அரசியலைத் தீர்மானிப்பதில் கிண்ணியாவின் பங்கு குறித்து இங்கு நான் சொல்லித்தான் புரிய வேண்டுமென்பதில்லை. அப்படியொரு சக்தியை, வாய்ப்பை இறைவன் எமக்கருளியுள்ளான், அல்ஹம்துலில்லாஹ்!

ஒரே தடவையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தும் தோற்றுப்போன பெருமை எமதூருக்கு மட்டுந்தானிருக்கிறது என்று நான் அடிக்கடி மார்தட்டிக்கொள்வதுண்டு.

அதெல்லாம் பழைய கதை விட்டுத் தள்ளுவோம். மறப்பதும் மன்னிப்பதும் மீண்டும் அணைப்பதுமே எமக்கு வழக்கமாகிவிட்டது. என்றைக்காவது ஒருநாள் மாற்றம் வருமென்று காத்துக்கிடக்கின்றன நிறைய உள்ளங்கள். அதுவரைக்கும் ஆடுபவர்கள் ஆடட்டும். கைகொட்டி மகிழ கிண்ணியா தயாராயிருக்கிறது.

உங்களது சொத்துக்கள் பார்த்துப் பொறாமைப் படவோ உங்களது வாகனங்கள் பார்த்து மூக்கில் விரல் வைக்கவோ எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் மீன் பிடிக்கப்போகனும்... வேளாண்மை வெட்டப்போகனும்... விறகெடுக்கப்போகனும்... அலுவலகம் போகனும்... நாங்கள் சாப்பிட்டால்தானே உங்களுக்கு வரிசையில் நின்று வாக்களிக்க எங்களுக்குச் சக்தியிருக்கும். ஆதலால் நாங்கள் எங்களது வேலையை மட்டும் பார்த்துக்கொள்கிறோம், உங்களைப் போலவே...!

இயல்பாகவே வருகின்றவற்றை மாத்திரம் கையொப்பமிட்டு உள்வாங்குவதென்றால் எங்களுக்கு எதற்கு அரசியல்வாதிகள்...? வருகின்ற பதிவுத் தபாலைப் பக்கத்து வீட்டுக்காரன் எடுத்து வைப்பதைப் போல....!

மன்னித்துவிடுங்க.... சொல்ல வந்ததைச் சொல்லாமல் என்னென்னவோ உளறிக்கொண்டிருக்கிறேன்...

என் மனதிலுள்ள கேள்விகளைத் தொடுக்கிறேன். விடையிருந்தால் கொமன்ட் பண்ணுங்க....!

தேர்தல் காலங்களில் போஸ்டர் அடிப்பீர்கள் அல்லவா....? அது உமக்காக வாக்குக் கேட்டு எமக்கு அடிக்கின்ற போஸ்டர்தானே..... அப்படியிருக்கையில் எங்கேயோ உள்ளவர்களின் புகைப்படங்களையும் போட்டு நிரப்பிக்கொள்கிறீர்களே... என்ன காரணம்?

அவர்கள் யார்?

உம்மை நம்பி வாக்களிக்குமாறு உமது ஊர்க்காரரிடம் கேட்பதற்கு ஏன் தூரத்திலுள்ளவர்களின் புகைப்படங்கள் தேவைப்படுகிறது....? பயமா....? உம்மை நம்பி வாங்களிக்கமாட்டோம் என்கின்ற பயமா...? அன்றேல் போஸ்டர்களுக்கான ஸ்போன்சர்களுக்கு மரியாதை செய்கிறீரா...?

நாங்கள் உங்களுக்கு வாக்குப்போட்டு விட்டு போஸ்டர்களிலுள்ள மற்றவர்களிடம் போய் மன்றாட முடியுமா....?

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... நாங்கள் உங்களுக்குத்தான் வாக்குப் போடுகிறோம்... போஸ்டர்களில் உம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கல்ல... உங்களால் எங்களை ஏமாற்ற முடியுமே தவிர நாங்கள் ஒருபோதும் கிண்ணியா தவிர்ந்த மற்றோரிடம் ஏமாந்துவிடமாட்டோம்....! நாங்கள் தனித்துவம் காப்பவர்கள்.

உங்களுக்குச் சீட்டுத் தந்தவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடனையெல்லாம் இனிமேலும் எங்களில் சுமத்திவிடாதீர்கள். சகிக்கமுடியவில்லை...!

தனித்துவமிக்கவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்பதனைக் காட்டச் சக்தியில்லாவிட்டாலும் எதிர்வருகின்ற தேர்தல் போஸ்டர்களிலிருந்தாவது ஆரம்பியுங்கள்.... நாங்கள் அதிலாவது ஆறுதலடையட்டும்!



கிண்ணியாக்காரன்

Share
comments

Comments   

 
0 #1 கிண்ணியா சண்டியன்... 2012-06-25 09:31
அதெல்லாம் சரி .... எந்த காக்கைய யார் புடிச்சாங்கன்னு 1 லிஸ்ட் போட்டா அந்த மாதிரி இருக்கும்.... மறா என்ன போட்டுடுங்க... அதுக்குப் பொறவ் எந்த காக்கா பறக்குதுனு பாப்போம்.....ஹ.ஹ.ஹ.;-);-)
Quote | Report to administrator
 
 
0 #2 kinniya jawhar 2012-07-15 21:59
ithay ennal ettukkolla mudiyathu.aanendral oru thalamayin keel oru katchin keel nitpever katchi cinnem katchi thalaiverin padamgal poduwathu entha thavarum illay
Quote | Report to administrator
 
 
0 #3 roshaen 2012-07-25 07:03
anpukkuriya kinniyakkaranukku
arasiyal vathikalidam kelvi ketkappohiran endru puappattu poster patry kettu sapppenntru aakkivitteerhale! kuraintha patsam,arasiyalukku varuhaiyil andradamkachchy yaha varuhireerhal. oru aatchy mudivathatkul maha kodeeswaranahireerhale athu eppady? endravathu kettu vaikkalame naam oru kalaththil arasiyalil eedupattal ivarhalaippola haram kalal peny kodeeswaranavathu eppady ene katrukkollalamallava!!!!!!!!!!!
Quote | Report to administrator
 
 
0 #4 HooperJeanine22 2012-12-24 10:33
Every one acknowledges that our life seems to be not very cheap, nevertheless we require cash for different stuff and not every person gets big sums money. Thus to get good credit loans and just collateral loan should be a right way out.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...10953
மொத்த பார்வைகள்...213386

Currently are 175 guests online


Kinniya.NET