கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று ஆரம்பமாகியது!
- கிண்ணியா இர்பான் -
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 38ஆவது கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இன்றைய விழாவின் வரவேற்பு உரையினை கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நிகழ்தினார்.
இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவின் ஆரம்ப நிகழ்வாக 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய விழாவில் அமைச்சர் பி.தயாரட்னஇ கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைஇ அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர்இ அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாஇ ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மேற்படி கிழக்கு மாகாண விளையாட்டு விழா நிறைவடைகிறது.



***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.