சனிக்கிழமை, மே 25, 2013
   
Text Size

ஒரு கனவு நனவாகிறது!

 

dr.mursi[1]
ஓர் உதய சூரியனின்
தார்மீகப் புறப்பாடு!
அங்கலாய்க்கும்
அரபு தேசங்களை
ஒளிக் கற்றைகளால்
ஓர் கற்றையாக்கட்டும்!
ஆட்சி மோகத்தில்
வரலாற்றைத் தொலைத்த
வரலாறுகளைத்தான்
கடந்த நூற்றாண்டுகள்
பதிந்து வைத்துள்ளன!
இன்றோ - ஓர்
வரலாறு படைக்கவே
இஹ்வானிய தூதன்
ஆட்சியேறுகிறான்!
பாரான் தேசத்தில்
பதிவிரங்கிய வைரஸ் கொல்லி
ஃபிஅவ்னிய சித்தாந்தத்தின்
சீர்திருத்த நாயகன்!
அரை நூற்றாண்டு
அடம்பிடிக்க - இன்று
வரலாற்றில்
இடம்பிடித்த
தவம் பெற்ற தாசன்!
சத்தியம் கோலோச்ச
சர்வாதிகாரத்தின் சரனடைவு!
கேள்விகளெல்லாம்
வேள்விகளாகிப் போன
இருட்டறைச் சங்கதி வரலாற்றில்
புலர்ந்த விடிவெள்ளி!
உலக சந்தையில்
காலாவதியாகிப்போன
சமூகப் பண்டங்களுக்கு
கிராக்கி அதிகரிக்க
இன்னும் நாட்கள்
தொலைவிலில்லை!!
ஹஸனுல்'பன்னா'வின் கனவு
நனவாகும் இன்னாள்
நபியின் சுன்னாவும்
மேடையேற இருக்கமாய்
இறையை இறைஞ்சுகிறோம்!
பல ஈமானிய உள்ளங்களின்
ஏக்கம் தோய்ந்த வேண்டுதல்
பலனற்றுப் போகவில்லை!!

 - அபூ அரீஜ்

 

Share
comments

Comments   

 
0 #1 Abu Areej 2012-06-30 15:02
சகோ. ஜெஸ்லியா,

மலடிக்கு குழந்தை பிறந்தாற் போலொரு சந்தோஷம்தான் இதுவும். வேறுவழியில்லை உணர்வுள்ள முஸ்லிமாக இருந்தால், இஸ்லாமிய சமூக அக்கறை இருந்தால் கண்டிப்பாக இத்தருணம் போற்றுதற்குறியதுதானே. முடிந்த முடிவாய் நான் எதையும் உரைக்கவில்லை, கூறவு முடியாது. அல்லாஹ்தான் எதிர்காலம் பற்றிய அறிவுடையவன். நாளைய இஸ்லாமிய உலகில் நலம் விளைய நாமனைவரும் பிரார்த்திப்போம் அதற்கான முயற்சியோடு.

நீங்களும் பிரார்த்தியுங்கள், நடப்பதெல்லாம் நலவாகவே அமையட்டும்.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14846
மொத்த பார்வைகள்...217279

Currently are 73 guests online


Kinniya.NET