மனதுடன் ஒரு நிமிடம்!

ஓ மனமே ! ஏன் எல்லாவற்றிலும்
தாவித் திரிகின்றாய் ..?
நிதானமாய் இரு
அவசரப் பட்டு எதையும்
முடிவு செய்து விடாதே !
கலந்து ஆலோசனை செய்
கலங்கி நிடாதே . .. மனமே. !
மனச் சஞ்சலம் ஏற்படுகின்றதா ?
உன்னை இரண்டாக்கிக் கொள் .
மனச்சாட்சியுடன் பேசிப்பார்..
சில நிமிடம் சிந்தனை செய் !
சில நிமிடம் மெளனமாயிரு .!
கவலை ஏற்படும் பேது...
கட்டுப் படுத்திக் கொள்....
கோபம் ஏற்படும் போது...
நிதானமாய் செயல் படு...!
நாவுக்கும்உனக்கும் ....
தூரம் அதிகமானாலும்.....
கோபத்தில் கொட்டித் தீர்க்கும்....
வார்த்தைகளை அள்ளமுடியாது..!
தாங்க முடியவில்லையா ..?
தனிமையை நாடு...
மனட்சாட்சி உறுத்துகிறதா ..?
மனம் விட்டுப் பேசு....
எல்லோரிடமும் எல்லாவற்றையும் ...
கொட்டித் தீர்த்துவிடாதே..!
இதயத்தை இறை நம்பிக்கையால்;;;;
ந்ரப்பிக் கொள்;;..!
இலட்சியத்திற்காக போராடு ...
இடைவிடாது முயர்ச்சி செய்....
ஆசையை அடக்கு .....
அமைதி கிடைக்கும்.....
விழித்திரு துணிந்திரு....
இதயமே உறங்கி விடாதே....!
இறை தியானத்தில் இருந்து......
இதயமே விலகிவிடாதே...! .
மூதூர் சுஹைதா அப்துல் கரீம்
வெள்ளவத்தை.



***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.