செவ்வாய்க்கிழமை, மே 21, 2013
   
Text Size

மனிதனும் மரங்களும்….!

crying tree1

மானிடன் பாரினில் பிறந்து விட்டான்!- அவன்
மரத்திலும் மோசமாய் வளர்ந்து விட்டான்!
காணியைப் பூமியை அபக ரித்தே!- பல
கேடுகள் செய்திடத் துணிந்து விட்டான்!

காய்கறித் தோட்டங்கள் செய்து ழைத்து!- சில
காசுகள் சேர்ப்பதை நிறுத்தி விட்டான்!
வாய்வசை பேசியே வம்ப வளத்து!- தினம்
வாழ்வதே கொள்கையாய் வகுத்து விட்டான்!

காய்ப்பதால் கல்லெறி படுகி றதே!- அந்தக்
காரியம் செய்வதும் நீ யல்லவா….!
ஆயுதம் கொண்டிதை நீத றித்தால்!- அவை
அழுதிடும்… அதையும் நீகேட் கலையா…?

காய்களும் கனிகளும் மலர்வ தையும்!- எம்
கழனிகள் தந்திடும் அழகி னையும்!
மனதினில் இதந்தரும் நிழலி னையும்!- மரம்
மகிழ்வுடன் தருவதை ஏன்:ம றந்தான்!

எழில்மிகு சூழலை வடிவ மைத்து!- மரம்
எங்கிலும் வளர்ந்திட நினைத்து விட்டால்!
வளம்தரும் புதியதோர் சூழ லினைநாம்!-இவ்
வையத்தில் இனிதெனப் படைத்தி டலாம்!


-கிண்ணியா எம்.ரீ.சஜாத்-

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...12660
மொத்த பார்வைகள்...215093

Currently are 47 guests online


Kinniya.NET