புதன்கிழமை, ஜூன் 19, 2013
   
Text Size

ஏனைய செய்திகள்

கிண்ணியா ஜே.பிரோஸ்கானின் "ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம்" நூல் வெளியீடு!!

aaaMujaarath03

கிண்ணியா ஜே.பிரோஸ்கானின் மூன்றாவது நூலான ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா 2013.06.16 ஞாயிறு காலை 9 மணிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஆறுமுகம் ஜெகசோதி தலைமையில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் மிக சிறப்பாக நடந்தது.

 

கிண்ணியா பாரூக் ரயீஸ் இற்கு "சிறந்த இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்" விருது.!

rayees02

உலக குருதி கொடையாளர்கள் தின (June 14) தேசிய வைபவம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய இரத்த தான சேவையில் தம்மை அர்ப்பணித்து, சிறந்த சேவையாற்றிய பலருக்கு இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியின் கரங்களால் விருதுகள் வழங்கப்பட்டன.

 

டெங்குடன் போராட 200 படையினருக்கு பயிற்சி!

dengu--mosqito 200_150

அரச நிறுவனங்கள்- திணைக்களங்கள்- சபைகள்- அமைச்சுக்கள் மற்றும் பாடசாலைகள் அடங்கலாக சகல அரசாங்க நிறுவனங்களிலும் வெள்ளிக்கிழமை தோறும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்க சுகாதார அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் தீர்மானித்துள்ளன.

   

மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது!

malik

முதற்தடவையாக இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காத்தான்குடியில் வைத்து கைச்சாத்திட்டப்பட்டது.

இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஹிறா பவுண்டேசன் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

 

ஓய்வு பெற்ற கி.மாகாண உதவி கண்காய்வாளர் நாயகம் கௌரவிப்பு!

ACC1

கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற உதவி கண்காய்வாளர் நாயகம் தம்பு பாலசுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

இந்நிகழ்வு திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

   

பக்கம் 1 - மொத்தம் 70 இல்

KinniyaNET Live Radio

image
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...12302
மொத்த பார்வைகள்...233503

Currently are 87 guests online


Kinniya.NET