Breaking News:

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான்.

ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு. உடம்பில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின்&ஏ" என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.


Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top