Breaking News:

கிண்ணியாவின் பெண் ஆளுமைகள் 01: முதல் பெண் விஞ்ஞான முதுமாணி அ.சல்மத்துள் ஜெசீலா

கிண்ணியாவின் முதல் பெண் விஞ்ஞான முதுமாணி அ. சல்மத்துள் ஜெசீலா.

 

கற்றவர்களும் கற்பிப்பவர்களும் ஏராளம்.
என்றாலும்
'தாம் கஷ்டப்பட்டுக் கற்ற கல்வியும்கூட ஒரு அமானிதம்தான்' என்ற உணர்வோடு அதை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவரே உன்னதமானவர்களாய் கருதப்படக் கூடியவர்கள்.

அவ்வாறான நேர்மையும், அர்ப்பணிப்பும், ஆளுமையும், தியாக சிந்தையும் கொண்டவர்தான் சகோதரி திருமதி சல்மத்துள் ஜெசீலா நிஜாம்தீன் அவர்கள்.

மூதூர் தொகுதி முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான அபூபக்கர் எம் பி யின் பேத்தியும்
எமது பெருமரியாதைக்குரிய ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர்கள் அபூசாலிஹு sir _ சபுரம்மா tr தம்பதிகளின் மூத்த மகளுமான
இவர்
தனது ஆரம்பக் கல்வியை தி /கிண் /அல்றவ்ழா வித்தியாலயத்திலும் , இடைநிலைக் கல்வியை தி /கிண் / மகளிர் கல்லூரியிலும் மற்றும் உயர்தரம் கே/ மாவனல்லை ஸாஹிரா கல்லூரியிலும் பெற்றிருக்கிறார்.

1994 இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய முதல்தடவையிலேயே பேராதனைப் பல்கலைக் கழக மிருகவைத்தியத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

என்றாலும் கற்பித்தலிலும் ஆசிரியப் பணியிலும் இவர் கொண்டிருந்த அதீத ஆர்வம் ,ஆசை காரணமாக மிருக வைத்தியத் துறையைத் தவிர்த்திருக்கிறார்.

இறைநியதி என்பது இதுதான் போலும்.
இல்லையென்றால் கிண்ணியாவின் முதல் பெண் மிருகவைத்தியராகவோ..இல்லை இரண்டாவது தடவையாகவும் பரீட்சை எழுதி ஒரு வைத்தியராகவோ வந்திருக்க வேண்டியவர்தான் இவர்.

படிக்கின்ற காலங்களிலேயே தனது திறமைகளாலும் நல்ல நடத்தைப் பண்புகளாலும் பாடசாலை,பல்கலைக்கழகங்களில் சக மாணவர்களாலும், கற்பித்த ஆசிரியர்கள், விரிவுரையாளர் களாலும்கூட பெரிதும் மதிக்கப்பட்டவர்.

கிழக்கு, பேராதனைப் பல்கலைக் கழகங்களின் B.Sc(Hons) (1999), M.Sc (2004) பட்டங்களையும் அத்தோடு கற்பித்தலில் பட்டப் பின் டிப்ளோமாவையும்(2008) பூர்த்தி செய்தவர்.

கிண்ணியாவின் முதலாவது பெண் விஞ்ஞானப்பட்டதாரி மற்றும் முதலாவது பெண் விஞ்ஞான முதுமானி எனும் சிறப்பிற்குமுரியவர்.

மேலும்
கிழக்குப் பல்கலைக் கழகம்,தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் மூன்று வருடங்கள் demonstrator ஆகப் பணிபுரிந்த பின்னரே
தி / கிண்/ அல் அக்‌ஷா கல்லூரியில் 2002/11/20 இல் ஆசி யராகத் தனது முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் தற்போது தி/கிண்ணியா மத்திய கல்லூரியில் உயிரியல் பாட ஆசிரியையாகவும் பகுதித் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார்.

இவர் தனது நிறைவான கற்பித்தல் செயற்பாடுகள் மூலம் பல வைத்தியர்களையும், விஞ்ஞானப் பட்டதாரிகளையும் எமது ஊருக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்.

இச்சகோதரியின் கற்பித்தல் சாதனைகளாகப் பின்வருவனவற்றை விசேடமாகக் குறிப்பிட்டுக் கூறலாம்.

1.தேசிய சாதனை - 2016 ஆகஸ்ட் உயர்தர பரீட்சை விஞ்ஞானப்பிரிவில் மஹ்தி ரோசன் அக்தார் என்ற மாணவரை அவரின் உயிரியல் பாட ஆசிரியராய் இருந்து பெறுபேற்றில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் மற்றும் சகோதர இனங்களுடன் 2ம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைக்க வழிகாட்டியமை.

2.காலஞ்சென்ற சரீப் சிறின் எனும் மாணவியை முதல் தடவையிலேயே மருத்துவத்துறைக்கு தேறியமைக்கு அளப்பரிய பங்காற்றியமை.

3.அல் அக்‌ஷா பாடசாலையில் 2010 டிசம்பர் ஓ எல் பரீட்சை Bilingual மாணவர்களை 100% ‘A’ சித்தி பெற வழிகாட்டியமை.

அத்தோடு கிண்ணியாவின் “House Of Science “ பிரத்தியேக கல்வி நிறுவனத்தின் பிரதான உயிரியல் ஆசிரியையாய்ச் செயலாற்றி வருவதோடு

தமது அன்புக் கணவருடன் இணைந்து உள்ளூரிலும் வெளியூர்களிலும் இவர் நடாத்தும் செயலமர்வுகள் உயர்தர உயிரியல் மாணவர்களுக்கு மிகவும் பெறுமதிமிக்கவை.

இவர் கற்பிக்கின்ற வெளி இடங்களாக பொலநறுவை தம்பால, ஓட்டமாவடி , வாழைச்சேனை, ஏறாவூர், மூதூர், பண்டாரவள போன்ற இடங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

கிண்ணியாக் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரியும் சட்டத்தரணி அ.மஜீத் நிஜாமுதீன் அவர்களின் அன்புத் துணைவியாராகவும்
1.நி. ஹாதிம்அகமட் A/L
2. நி அத்லி அகமட் Grade 11
3. நி திம்மத் அகமட் Grade 06 ஆகியோரின் அன்புத் தாயாருமான ஜெசீலா ஆசிரியை தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் மிகச் சிறப்பாக வழிநடத்தும் இல்லத் தரசியாகவும் தாயாகவும் திகழ்வதைக் கடந்த
2016 இன் இடைநிலை மாணவர்க்கான தேசியமட்ட‘விஞ்ஞான ஒலிம்பியாட் “ போட்டியில் தனது மூத்த புதல்வனை பங்குபெறச்செய்து அகில இலங்கை ரீதியில் 3ம் நிலை பெற்று வெண்கலப்பதக்கத்தினைப் பெற வழிகாட்டியதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறான கற்பித்தல் திறமை நிறைந்த பெண்ணாசிரியர்கள் கற்பிப்பதிலேயே முழு நிறைவு கொண்டு விடுகின்ற னர்.

கற்பித்தல் கடந்து
பொது, கல்வி நிருவாக, அதிபர்,திட்டமிடல் சேவைகளில்.. இணைந்து கொள்ளும் முயற்சிகளில் அக்கறை,ஆர்வம் குறைவாகவே உள்ளனர்.உண்மையில் இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவரும் திறமையான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதோடு மட்டும் திருப்திப்பட்டுவிடாது செயற்திறன் மிக்க ,அதிபராகவோ, திட்டமிடல் மற்றும் கல்வி நிருவாக அதிகாரியாகயோ உயர்வடைய வேண்டுமென்பதே எம் அனைவரினதும் அவாவாகும்.

சகோதரி ஜெசீலாவுக்கும் மற்றும் அவரின் அனைத்து தேடல்,முயற்சிகளிலும் அவருக்கு மிகுந்த பக்கபலமாய் இருந்துவரும் அவரன்புக் கணவர் நிஜாம்தீன் சேர் அவர்களுக்கும் நிறைவான உடல் உள ஆரோக்கியத்தையும், நீடித்த ஆயுளையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கி அருள் புரிவானாக.

எஸ். ஃபாயிஸா அலி.

 

https://www.youtube.com/watch?v=-ClwajwFYM0&list=PLCuy23ip4FeIrd3jIzmQfJvWgv6-ux3Kq&index=31

 
Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top