Breaking News:

 

கிண்ணியாவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.எம்.அபூபக்கர் அவர்களாவர். இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு சமூகப் பணிகள் செய்துள்ளார்.

திருகோணமலை மத்திய வீதியில் வசித்து வந்த மர்ஹூம்களான அப்துல் றஸ்ஸாக் ஆலிம் - முகம்மது நாச்சியா தம்பதிகளுக்கு 1912.03.31 இல் இவர் மகனாகப் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்ப மார்க்கக் கல்வியை வீட்டில் தந்தையிடமும் பாடசாலைக் கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் கற்றார். சுவாமி விபுலாந்தரிடமும் கல்வி கற்ற இவர் அவரது அன்புக்குரிய மாணவர்களுள் ஒருவராகவூம் திகழ்ந்தார்.

ஆங்கில மொழியில் நல்ல புலமையூம்இ பேச்சாற்றலும் உள்ள இவர் ஐக்கிய இராச்சிய ஆங்கில மொழிப் பரீட்சையிலும் தேர்ச்சியடைந்தார். ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1938 -1940 காலப்பகுதியில் மீரிகம ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியர்ப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த வேளை கம்யூ+னிஸ்ட்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

மர்ஹூம் அபூபக்கர் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இக்காலப்பகுதியில் கிண்ணியா மக்களோடு நெருங்கிப் பழகிப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

1944 ஆம் ஆண்டு திருகோணமலை உள்@ராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் அதன் உதவி தவிசாளராக நியமனம் பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருகோணமலைக்கு வரும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். இதனால் இவரது பெயர் மாவட்டம் முழுக்க பரவியது.

திருகோணமலையிலுள்ள சோனகத்தெருஇ ஜமாலியாஇ கடல்முகவீதிஇ ஜின்னாநகர்இ பள்ளிவாயல் வீதி போன்றன இவரினால் சூட்டப்பட்ட நாமங்களாகும். மிகவூம் சாந்தமான குணமுடைய இவர் மூவின மக்களினதும் அன்பைப் பெற்றிருந்தார்.

1947ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மூதூர்த் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட இவர் 3480 வாக்குகள் பெற்று தனது 35வது வயதில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.

இதனால் தனது நிரந்தர வசிப்பிடத்தை கிண்ணியாவூக்கு மாற்றிக் கொண்டார். இதன் மூலம் கிண்ணியாவினதும்இ மூதூர்த் தொகுதியினதும் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.

இவர் தனது அரசியல் காலத்தில் கல்விஇ சுகாதாரம்இ போக்குவரத்து அபிவிருத்தி மற்றும் பொதுச் சேவைகள் என அளப்பெரும் சேவைகளைப் புரிந்துள்ளார். சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களையூம்இ அதிகாரிகளையூம் அழைத்து வந்து இப்பகுதி அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியூள்ளார்.

திருகோணமலை சிங்கள கலவன் பாடசாலை (தற்போதைய சிங்கள மத்திய மகா வித்தியாலயம்)இ அக்கரைச்சேனை அரசினர் கலவன் முஸ்லிம் பாடசாலை (தற்போதைய அல்ஹிலால் மத்திய கல்லுhரி)இ திருகோணமலை சாஹிராக் கல்லூரிஇ காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைஇ பூவரசந்தீவூ அல்மினா மகா வித்தியாலயம்இ ஈச்சந்தீவூ விபுலாநந்த வித்தியாலயம் உள்ளிட்ட 12 புதிய பாடசாலைகள் மாவட்டம் முழுவதும் இவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா மத்திய கல்லூரிஇ மூதூர் மத்திய கல்லூரி ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. பல பாடசாலைகளுக்குத் தேவையான பௌதீக வளங்களையூம் இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கிண்ணியாவிலுள்ளோர் கல்வி கற்க வேண்டும். அதன் மூலமே சமூகம் மறுமலர்ச்சி பெறும் என்று கருதிய இவர் பெற்றார்களை அணுகி அவர்களது பிள்ளைகளை வெளியூ+ர்களுக்கு அனுப்பி கற்கவைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார். முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களை இந்தியாவின் பூனா பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தவர் இவரே.
கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தின் ஆரம்பகர்த்தா இவரே. இதனைத் தவிர நிலாவெளி உப அஞ்சல் அலுவலகம்இ பேராற்றுவெளி உப அஞ்சல் அலுவலகம்இ தம்பலகமம் புகையிரத நிலையம் போன்றனவூம் இவராலேயே ஆரம்பிக்கப்பட்டன.

கிண்ணியா ஒரிக்கன் பாலநிர்மாணம்இ கிண்ணியா துறைக்கான பாதைச் சேவை என்பன இவரது பொதுச்சேவைகளுள் சிலவாகும். ஓரிக்கன் பாலம் திறப்பு விழாவின் போது அப்போதைய அமைச்சர் ஜி.ஜி.பொன்னம்பலம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். இவ்வைபவத்தில் வைத்தே பொதுமக்களின் நலனில் அதிக அக்கறை காட்டிச் செயற்பட்ட அப்போதைய உதவிஅரசாங்க அதிபரான ஆங்கிலேயர். ஒ ரீகனின் பெயரை இப்பாலத்திற்கு இவர் சூட்டினார்.

செய்யது மர்ஜானி இவரது வாழ்க்கைத்துணைவியாவார். மஹ்பூபா (ஓய்வூபெற்ற ஆசிரியை- கவிஞர் கிண்ணியா அமீரலியின் தாய்)இ சித்திபரீதா (சித்தி ரீச்சர் - ஓய்வூபெற்ற அதிபர்)இ சபுரா உம்மா (ஓய்வூபெற்ற ஆசிரிய ஆலோசகர்)இ மர்ஹூம் முகம்மது ஹம்ஸா (ஓய்வூபெற்ற ஆங்கில ஆசிரியர்)இ அப்துல் றஸ்ஸாக் மௌலவிஇ உம்மு குல்தூம் (ஆசிரியை)இ முகம்மது காலித்இ நூர்காமிலாஇ மர்ஹூமா சித்தி குறைஸா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.

இவரது சேவைகள் நமது வரலாற்றின் ஒரு பகுதி என்பதால் இது தொடர்பாக இக்காலச் சந்ததியினர் விளங்கிக் கொள்வது அவசியமாகும். இவர் 1975.02.23 ஆம் திகதி காலமானார். அன்னாரின் ஜனாஸா கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேடல்:

ஏ.சி.எம்.முஸ்இல்

 

முதன்மையானவர்கள்

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top