அரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம்
அரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம்
வழங்கும் நிகழ்வானது, மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப்பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு மத்தியில் இந்நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் நடைபெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வின்போது, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 95 உத்தியோகத்தர்களும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த103 உத்தியோகத்தர்களுமாக 198 பேருக்கு நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நியமனங்களைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுப் பயிற்சிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மாகாண விளையாட்டு இணைப்பாளர்கள், விளையாட்டு பிரிவின் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.