இந்நாட்டின் அரசாங்க வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக கையொப்பமிட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் புதிய அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஜயகொடி தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரினாலும் எமது நாட்டின் எந்தவொரு வளங்களையும் கொள்வனவு செய்ய முடியாது எனவும் இன்னும் 4 மாதங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்களில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாகவும் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.