Breaking News:

ஹபரண – ஹிரிவட்டுண பாதுகாப்பு காட்டு பகுதியில் 7 யானைகள் மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்ககைகள் குறித்து விஷேட பேச்சுவார்த்தை ஒன்று மாலை நடைபெறவிருப்பதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வன ஜீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

யானைகளினால் பொதுமக்களுக்கு எற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த யானைகள் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு வதந்திகள் மூலம் பொது மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

மர்மமான முறையில் இறந்த 7 யானைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்காக 3 பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று வன ஜுவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.ஜெ. சி. சூரிய பண்டார தெரிவித்துள்ளார். ஹபரண, ஹிரிவட்டுண தும்பிகுளம் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இந்த யானைகள் இறந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்கள் தொடர்பான விசாரணையின் போது இவற்றின் வயிற்றில் வெள்ளரி விதைகள் இருந்தமை கண்டறியப்பட்டதாக வன விலங்கு கால்நடை வைத்தியர் சந்தன ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் (27)ஆம் திகதி இறந்த நான்கு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, செப்டெம்பர் (28)ஆம் திகதி மேலும் 3 யானைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு இறந்த யானைகளில் ஆறு பெண் (பிடி) யானைகளும் 1 ஆண் (களிறு) யானையும் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிகிரியா வன விலங்குகள் அலுவலக அதிகாரிகள், இராணுவம், ஹபரண பொலிஸார் ஆகியோர் பிரதேசவாசிகளுடன் இணைந்து, மேலும் யானைகளின் சடலங்கள் உள்ளதா என தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவு விசமாகி இறந்திருந்தால் யானைகளின் இரத்த படிமங்கள் மூலம் இதனை கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 28 ஆம் திகதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானையின் உடற் பாகங்களில் ஒன்று களிறு (ஆண்) யானையின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்;டார்.

 
 

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top