Breaking News:

திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் டெங்கு நோயினால் 1023 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார தொற்று நோயியலாளர் பிரிவின் பொறுப்பதிகாரி தங்கவேல் நிலோஜன் தெரிவித்துள்ளார்.

சுகாதார திணைக்களத்தினால் விடுக்கப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் டெங்கு நோய் பரவும் விதத்தில் செயல்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருகோணமலையில் பிராந்திய சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை, உப்புவெளி, மூதூர், கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி போன்ற பகுதிகளில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நீர் தேங்க கூடிய இடங்களை தமது வீடுகளில் பரிசோதனை செய்து அகற்றுமாறும், வீட்டு கட்டட நிர்மாணத்தில் நீர் தொட்டிகள் அமைப்பதை தவிர்த்து பாதுகாப்பான பிளாஸ்டிக் நீர்த்தாங்கிகளை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விசேடமாக அரச சார்பற்ற நிறுவனங்களினால் தேவையற்ற விதத்தில் குழாய் கிணறுகள் அமைப்பதை தடுக்குமாறும் சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவளை, 

கிண்ணியாவில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் அவதானமாக செயற்படுமாறு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜீத் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கிண்ணியா பிரதேசத்தில் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 22 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

நவம்பர் மாதம் முதல் இன்று வரைக்கும் 42 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். தொடர்ந்தும் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மாத்திரம் அல்லாமல் பிரதேச செயலக ஊழியர்கள், நகரசபை ஊழியர்கள், வலயக் கல்வி ஊழியர்கள், பொலிஸார், சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் முப்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொது மக்கள் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பதோடு நீர் தேங்காத வகையில் பாதுகாப்பாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

யாசீம்

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top