குச்சவெளி பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று (23) கைது செய்துள்ளனர்.
குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டு செல்வதாக திருகோணமலை சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம்)
- Details
- Hits: 288