அவுஸ்திரேலிய அணி வெற்றி - இலங்கை 247 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் லசித் மாலிங்க 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 97 ஓட்டங்களைப் பெற்றார்.