வௌியீட்டிற்கு முன்னதாகவே 17 விருதுகளை வென்ற ஒற்றைப் பனைமரம்

Print

புதியவன் ராசையா இயக்கியுள்ள ஒற்றைப் பனைமரம் எனும் திரைப்படம் வௌியீட்டிற்கு முன்னதாகவே 17 விருதுகளை வென்றுள்ளது.

திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம்.

இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘ஒற்றைப் பனைமரம்’ என்ற படம் தயாராகியுள்ளது.

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகி 17 விருதுகளை வென்ற படம் இது.

இதில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.

அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.