அண்மையில் நடைபெற்ற இலங்கை சட்டக் கல்லூரியின் 2019 கல்வி ஆண்டு அனுமதிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இந்தத் தடவை சட்டக் கல்லூரிக்கு 246 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

2019 கல்வி ஆண்டுக்கான அனுமதிப் பரீட்சையில் 4 900 இற்கும் அதிக பரீட்சார்த்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.