கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு 50 கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய கவிதை தொகுதி வெளிடப்படவுள்ளது

இக்கவிதை தொகுதிக்கு கவியார் வமுள்ள கவிஞர்களிடம் இருந்து கவிதைகள் கோரப்படுகின்றன. உங்கள் கவிதைகளை பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக சமர்ப்பிக்குமாறு. மன்றத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

கவிதைகள் யாவும் புதுக்கவிதையாக எழுதப்பட வேண்டும். படிமம், குறியீட்டு, ஹைக்கூ, நவீனம், பின் நவீனத்துவ வடிவங்களும் ஏற்புடையது

ஏற்கனவே வெளிவந்தனவாக இருத்தலாகாது. அவ்வாறு வெளிவந்த கவிதைகள் எவ்வித அறிவித்தலுமின்றி நீக்க்ப்படும்.
நாட்டின் எப்பாகத்தில் வாழ்பவர்களும் வெளிநாட்டில் வாழும் உள்ளூர், வெளியூர் மற்றும் முகநூல் நண்பர்களும் கவிதைகளைச் சமர்ப்பிக்கலாம்


பால், இன, வயதுக் கட்டுப்பாடுகள் கிடையாது.
ஏ4 தாளின் ஒரு பக்கத்திற்குள் அமையக்கூடியதாக 35 - 40 வரிகளுக்கு உட்பட்டதாக
இருத்தல் வேண்டும்


எந்தத் தலைப்பிலும் எழுதலாம். ( முரண்பாடுகள் ஏற்படாத வகைகள் இருத்தல் வேண்டும்)
ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே சார்ப்பிக்க வேண்டும்.


கவிதைகள் சமர்ப்பிக்கும் அனைத்து கவிஞர்களும் நூல் வெளியீட்டு விழாவின் போது கெளரவிக்கப்படுவார்கள்.


கவிதையுடன் உங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கவிதைகள் யாவும் .2019.11.30 ஆம் திகதிக்குள் கிடைக்கக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்.

கவிதைகள் யாவும் தட்டச்சு செய்யப்பட்டு பின்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்ப முடியும்.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தபாலில் அனுப்ப விரும்புவோர் பின்வரும் முகவரிக்கு அனுப்ப முடியும்.

தலைவர்
கிண்ணியா கலை இலக்கிய மன்றம்,6ஆம் டிவிசன்,
பெரிய கிண்ணியா,
கிண்ணியா .பின்வரும் முகவரிக்கு அனுப்ப முடியும்.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். எச்.எம்.ஹலால்தீன் 0779919368
நஸார் இஜாஸ்: 077552 1110
முகம்மது ரஷ்மி: 0772271289