ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் பற்றி அறியக்கிடைத்துள்ளது.

அவர் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019-12-26