Breaking News:

வாழைச்சேனை தேசியகடதாசி ஆலை 1956ம் ஆண்டு இலங்கையில் முதல்முதலாக நிறுவப்பட்ட ஒரு கடதாசியாலையாகும் அதன் பின்னர்தான் இலங்கையில் எம்பிலிப்பிட்டிய கடதாசியாலை நிறுவினர்.

இந்த தேசியகடதாசி ஆலையில் கி;ட்டத்தட்ட (3000) மூவாயிரம் ஊழியர்கள் வேலை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது

கடதாசி ஆலையில் பொருத்தப்பட்டிருக்கின்ற இயந்திரங்கள் யாவும் ஜேர்மனி நாட்டின் தரமான உற்ப்பத்திகள் இவற்றிக்கு ஆயுள்கால உத்தரவாதம் உடையவைகள் இவற்றினை மீழ் திருத்தத்திற்கு உட்படுத்தினால் நமது மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கலாம் எனும் உயரிய நோக்குடன் முன்னால் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் வீ.முரலிதரன்  தெரிவித்தார்.

அந்தவகையில் வாழைச்சேனை தேசியகடதாசி ஆலையானது இலங்கைக்கு வருமானத்தினை பெற்றுக்கொடுத்த ஒரு நிறுவனமாக செயல்பட்டது 1956ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது தேற்சிபெற்ற தொழிலாளர்கள் இல்லாமையினால் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியது அவ்வேளை முகாமைத்துவம் ஒருமுறை மூடிவிடலாமா என்றுகூட சிந்தித்தது அதன்பின்னர் தொழிலாளர்களின் அயராத உழைப்பினால் 1960ம் ஆண்டு இலங்கையிலே இலாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

திறைசேரிக்கு வருடத்திற்கு 100மில்லியன் ரூபாவை வரியாக செலுத்திவந்தமையும். சிறந்த உற்பத்திக்கான விருதினையும் வாழைச்சேனை தேசியகடதாசி ஆலை பெற்றிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும். 1960ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரைக்கும் சிறப்பான உற்ப்பத்தியினை நாட்டிக்கு வழங்கிவந்தது அக்காலம் கிழக்குமாகாணத்தில் விவசாயிகளினால் வீசப்பட்டுவரும் வைக்கொல்களுக்கு விலைகொடுத்து வாங்கி தரமான கடதாசினை நாட்டிற்கு உற்பத்திசெய்தமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை கடதாசியாலையின் வருமானத்தில் போட்மெ~pன் நிறுவப்பட்டது பின்னர் 1974ம் ஆண்டு கொழும்பு யூனியன் பிலேஸ் பகுதியில் 126 பேச் காணி வாங்கப்பட்டு தலைமைக்காரியாலைய கட்டடம்  அமைக்கப்பட்டது பின்னர்1976ம் ஆண்டு ஜேர்மனிய அரசாங்கத்தின் கே.எஸ்.டபிள்யூ கடன் திட்டத்தின் மூலம் எம்பிப்பிட்டிய கடதாசியாலை அமைக்கப்பட்டது. இதற்கு வழங்கப்பட்ட கடனில் பாரியளவான தொகையை வாழைச்சேனை கடதாசியாலைதான் கட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி காலத்தில் 1997ம் ஆண்டு பொது வளங்கள் சீரமைப்பு ஆணைக்குழுவின் சிபார்சில் கம்பனியாக கொண்டுவரப்பட்டு தேசிய கடதாசி லிமிட்டெட் கம்பனியாக்கப்பட்டது பின்னர் 1993ம் ஆண்டுக்கு பின்னர் சூற்றாடல் மாசடைவதாக காரணம்காட்டி வைக்கொல் மூலப்பொருளை நிறுத்தி கழிவு கடதாசினை மூலப்பொருளாக்கி இயங்கிவந்த நிலையில் உள்ளுர் யுத்தத்தின் தாக்கமு அதிகரிக்க அதிகரிக்க கடதாசி ஆலையின் செயப்பாடுகளும் ஸ்தம்பிக்கத்தொடங்கியது.

பின்னர் காலத்திற்கு காலம் வருகின்ற அரசாங்கத்தின் பிரதி நிதிகள் பார்வையிடுவது வாக்குறிதிகளை வழங்குவதுமாக இருந்த நிலையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றது அமைச்சர் விமல் வீரவன்சையுடன் கருணா அம்மான் பலதடவைகள் உரையாடி அவரை வாழைச்சேனைக் அழைத்து வந்து அபிவிருத்தினை உடணடியாக ஆரம்பித்து தற்போது கடதாசியாலை இயங்கு நிலைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் இதற்கான ஊழியர்கள் நியமனங்கள் தேர்தலின் பின்னர் நடத்தலும் உள்ளதாக கருணா அம்மான் தொரிவித்தார்.    

வ.ஜீவானந்தன் 

கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிணாமம். !

உங்கள் விளம்பரங்களைச் சேர்க்க இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்.!

அனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். !

வீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. !

சிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.!

உங்களின் வியாபார தோழன் கிண்ணியன்.

www.kinniyan.com

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top