வானிலை ,கடல் நிலை குறித்து விசேட அறிவிப்பு
2020 செப்டம்பர் 20ஆம் திகதியளவில் வடகிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (06N - 16N, 83E - 96E) செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலமான அல்லது மிகப் பலமான காற்று வீசக்கூடுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியும் கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படுகின்றது
மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் செப்டம்பர் 19ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து காலி வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையானகடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகஅல்லது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுகொந்தளிப்பாகஅல்லது கொந்தளிப்பாகக்காணப்படும்.
- Details
- Hits: 194