சிரியாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரேல் விமானங்கள்; 50 மேற்பட்டோர் பலி
சிரியாவில் உள்ள இரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த இரு வாரங்களில் சிரியா மீது இத்தகைய தாக்குதல் நடப்பது இது நான்காவது முறை.