Saturday, 28, Jan, 1:38 AM

 

யக்காபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

 சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டது.

 இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை, குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 இச்சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவப் படைப் பிரிவு இராணுவப் பொலிஸாரின் (SLACMP) சமாந்தரமான இராணுவ விசாரணையும் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வருகின்றது.

 மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் திங்கட்கிழமை (4) இந்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரிகேட் கமாண்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்தது.

 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை உதைக்கும் வீடியோ காட்சி சமூக ஊடக தளங்களில் வைரலானதை அடுத்து, அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

(நியூஸ் வயர்)

Comment


மேலும் செய்திகள்

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners