
கிண்ணியாவின் முதல் முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர். அவர்களுள் ஒருவர் மர்ஹூம் முகம்மது இப்ராஹீம் (காசீம்பாவா மாஸ்டர்), மற்றையவர் மர்ஹூம் ரீ.ஏ.எம்.இஸ்ஹாக் அவர்களாவர். மர்ஹூம்களான தாவூது ஆலிம் - ஹப்ஸா தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1925.02.04 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் இவர் பிறந்தார்.
தற்போதைய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் அப்போது இயங்கிய ஆண்கள் பிரிவூ பாடசாலையில் இவர் கல்வி கற்றார். தனது குடும்ப வறுமை காரணமாக கல்வியை இடையில் கைவிட்டு திருகோணமலை துறைமுகத்தில் நேரக் கணிப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
எனினும், கல்வி கற்கும் ஆசை இவரது மனதை விட்டும் அகலாததால் இரவூ நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் ஆங்கிலம் கற்றார். 8ஆம் தரத்தோடு கைவிட்டிருந்த கல்வியை வீட்டிலிருந்தவாறே தொடர்ந்து 1948ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ஸி பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார்.
இதன் பயனாக அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையின் இருவருட முன்பயிற்சியோடு 1953ஆம் ஆண்டு இவருக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றார்.
இந்த வகையில் கிண்ணியாவின் முதல் முஸ்லிம் ஆசிரியர்களுள் ஒருவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். 1963ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்தார். இதன் மூலம் கிண்ணியாவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு ஆசிரிய பயிற்சிகளை முடித்த முதலாமவர் என்ற பெருமையையூம் இவருக்குண்டு.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையூம் சேர்ந்த 8 பாடசாலைகளில் இவர் ஆசிரியராக மற்றும் அதிபராகப் பணியாற்றியூள்ளார். 1970 ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றார். இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் வட்டாரக்கல்வி அதிகாரி என்ற பெருமையூம் இவருக்கு கிடைக்கிறது.
கிண்ணியாவின் கல்வித்துறையை முன்னேற்றுவதில் இவர் அரும்பாடு பட்டுள்ளார். அமரர் காசிநாதரோடு இணைந்து வீடுகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து கற்பிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத வேளையில் பல பாடங்களை இவர் கற்பித்துள்ளார். வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த வேளையில் பாடசாலைகளுக்கு வளங்கள் பெறுவதிலும்இ புதிய பாடசாலைகளை உருவாக்குவதிலும் அரசியல் தலைவர்களோடு இணைந்து பணியாற்றியூள்ளார்.
33 வருடங்கள் கல்விப் பணியாற்றிய மர்ஹூம் இஸ்ஹாக் அவர்கள் 1985.12.03இல் ஓய்வூ பெற்றார். தனது அரசபணி ஓய்வூடன் பொதுப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர் கிண்ணியா சுமையா மகளிர் அறபுக்கல்லூரியைக் கட்டி எழுப்புவதில் பெரும் பணியாற்றினார். இன்று அக்கல்லூரியில் தலைநிமிர்ந்து நிற்கும் பல பௌதீக வளங்கள் இவரது அயரா முயற்சிக்கு கிடைத்த பலன்களாகும்.
சுமையாவூக்கு தினமும் விஜயம் செய்து மேற்பார்வை செய்யூம் இவர் அதற்காக பல கிலோமீற்றர் தூரம் நாளாந்தம் சைக்கிளில் பயணம் செய்து வந்தார். அவரது எண்ணம் எப்போதும் சுமையாவைப் பற்றியதாகவே இருந்து வந்தது.
இதனைவிட தன் வாழ்வின் கடைசிவரை பள்ளிவாயல் சம்மேளனத் தலைவராக இருந்து அரிய பல பணிகள் புரிந்துள்ளார். ஆரம்பத்தில் சின்னக் கிண்ணியா பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவராகவூம்இ பின்னர் கிண்ணியாப் பிரதேச பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவராகவூம், அதனையடுத்து மாவட்ட சம்மேளனத் தலைவராகவூம் இவர் பணியாற்றியூள்ளார்.
ஒழுக்கவியல் வீழ்;ச்சிஇ அநாச்சாரங்கள்இ மார்க்க விரோதச் செயல்கள் என்பவற்றைக்கட்டுப் படுத்துவதில் என்றுமே இவர் பின் நிற்கவில்லை. அதற்காக தன்னாலான அனைத்து முயற்சிகளையூம் முன்னெடுத்து வந்தார். இதனால் “யதார்த்தவாதி வெகுசன விரோதி” என்ற வகையில் அவ்வப்போது இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எதற்கும் அஞ்சாமல் தன்பணியை இவர் தொடர்ந்தார்.
அதன் விளைவாக சில கயவர்களினால் இவரது மருந்துக்கடை இரவூ நேரத்தில் தீக்கிரையாக்கப் பட்ட சோகத்தையூம் இவர் அனுபவித்தார். இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத இந்த இழிசெயலினால் இவர் பாதிக்கப்பட்ட போதிலும் சளைத்துப் போகவில்லை. ‘இறைவனுக்கான பணியில் கூலி தருபவன் இறைவனே’ என்ற அடிப்படையில் தன் பணியைத் தொடர்ந்தார்.
திருமதி உம்சல் உம்மா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். உம்மு நஸீமா, முகம்மது சமீம் (அல் அக்ஸா முன் பாமசி), சித்தி சரீனா (மனையியல் ஆசிரிய ஆலோசகர்), முகம்மது மஸாஹிர் (விரிவூரையாளர்) சித்தி பரீனா, சமீனா (ஆசிரியை) ஆகியோர் இவரின் பிள்ளைகளாவர்.
கடைசி சந்தர்ப்பம் வரை பொதுப்பணி புரிந்த இவர் தனது 81வது வயதில் 2006.06.25ஆம் திகதி இறையடி எய்தினார். அன்னாரின் ஜனாஸா கிண்ணியா றஹ்மானியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தனது வாழ்நாளை கல்விப் பணி, பொதுப்பணி ஆகியவற்றுக்காக அர்ப்பணித்த மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களைப் போன்றவர்கள் இன்றைய நமது சமூகத்தில் உருவாக வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது.
தேடல்:

ஏ.சி.எம்.முஸ்இல்