Thursday, 28, Sep, 2:18 PM

 

கிண்ணியாவிலிருந்து முதன்முதல் மாகாணத் திணைக்களமொன்றின் பணிப்பாளராக நியமனம் பெற்றவர் எஸ்.எம்.ஹூஸைன் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான சேகுமதார் - மரியம்பீவி தம்பதிகளின் இரட்டைப் புதல்வர்களுள் ஒருவராக 1962.04.12இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமவை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்ற இவர் பட்டப் படிப்புக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார்.
1990 இல் விவசாய விஞ்ஞானமானிப் பட்டம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் விவசாய விஞ்ஞானமானி என்ற அந்தஸ்தை இவர் பெறுகின்றார்.
1991 இல் ஆசிரியராக கிண்ணியா மத்திய கல்லூரியில் நியமனம் பெற்ற இவர் அதே ஆண்டு நடைபெற்ற இலங்கை விவசாய சேவைப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்தார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் இலங்கை விவசாய சேவை உத்தியோகத்தர் என்ற அந்தஸ்தும் இவருக்கு கிடைக்கின்றது. 
வடக்கு கிழக்கு விவசாய நீர்ப்பானத் திட்டத்தின் (NEIAP) உதவி விவசாயப் பணிப்பாளராக முதல் நியமனம் பெற்ற இவர் செயற்றிட்ட அதிகாரி, விவசாய உத்தியோகத்தர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். 
மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பிரதி விவசாயப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ள இவர் 201 இல் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பளரானார். இதன் மூல் கிண்ணியாவின் முதல் மாகாணப் பணிப்பாளர் என்ற அந்தஸ்தையும் இவர் பெறுகின்றார்.
நெதர்லாந்து வாங்நீங்கன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான முதுமானி பட்டம் பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தனது தொழில் தொடர்பில் நெதர்லாந்து, மலேசியா, தென்கொரியா, இந்தோனேசியா, சீனா, வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளில் குறுகிய கால பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார். 
ஆரவாரமில்லாத போக்குடைய இவர் தனது பதவி நிலைக்கப்பால் எல்லோருடனும் சாதாரணமாகப் பழகுவார். பிறருக்கு உதவுவதிலும் முடியுமான அளவு முயற்சிப்பார்.
செய்யது அனபி - சமீனா ஆசிரியை இவரது வாழ்க்கைத்துணைவி. முகம்மது இன்ஸமாம், பாத்திமா சஹானியா, பாத்திமா சம்ஹா ஆகியோர் இவரது பிள்ளைகள். 
2022 டிசம்பர் 31 இல் அரச சேவையிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். 

தேடல்:


ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners